ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்த “கூலி” படத்தின் ரன் டைம்! இவ்வளவு பெரிய படமா?

2 months ago 30
ARTICLE AD BOX

எகிறும் எதிர்பார்ப்பு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. வெளிநாடுகளில் இத்திரைப்படத்திற்கான முன் பதிவு தொடங்கப்பட்ட நிலையில் டிக்கெட்டுகள் மளமளவென விற்றுத்தீர்ந்து வருகின்றன. இத்திரைப்படம் வெளியாக இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் இத்திரைப்படத்தை கொண்டாட்டத்துடன் வரவேற்க தயாராகி வருகின்றனர். 

“கூலி” திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் ஸ்ருதிஹாசன், சௌபின் சாஹிர், சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் LCU அல்லாத திரைப்படம் என லோகேஷ் கனகராஜ்  பல பேட்டிகளில் உறுதிபடுத்திவிட்டார். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் ரன் டைம் குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 

Information leaked about Coolie movie run time 

இவ்வளவு பெரிய படமா?

அதாவது “கூலி” திரைப்படம் 2 மணி நேரம் 49 நிமிடங்கள் வரை நீளம் கொண்ட திரைப்படம் என தகவல் வெளிவந்துள்ளது. இதற்கு முன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த “லியோ” திரைப்படம் 2 மணி நேரம் 42 நிமிடங்கள் நீளம் கொண்ட திரைப்படமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

சமீப காலமாக பெரிய ஹீரோ திரைப்படங்கள் பெரும்பாலும் 2 மணி நேரம் 40 நிமிடங்களுக்கு அதிகமாகவே ரன் டைம் கொண்டுள்ளதை பார்க்க முடிகிறது. இது ஒரு விதத்தில் ரசிகர்களுக்கு சலிப்பை தட்டும் விதமாக அமைந்துவிடுவதாக பலர் விமர்சிக்கின்றனர்.

  • Information leaked about Coolie movie run time ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்த “கூலி” படத்தின் ரன் டைம்! இவ்வளவு பெரிய படமா?
  • Continue Reading

    Read Entire Article