ARTICLE AD BOX
ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி
ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் இத்திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இதில் ரஜினிகாந்துடன் ஸ்ருதிஹாசன், சௌபின் சாஹிர், சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது. பாலிவுட் நடிகர் ஆமிர்கான் “கூலி” திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

திடீரென வெளிவந்த மூன்றாவது சிங்கிள்
“கூலி” திரைப்படத்தில் இடம்பெற்ற “Chikitu”, “மோனிகா” ஆகிய பாடல்கள் பட்டித் தொட்டி எங்கும் பட்டையை கிளப்பிய நிலையில் இன்று இரவு 9 மணிக்கு இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “POWER HOUSE” என்ற பாடல் மூன்றாவது சிங்கிள் பாடலாக வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென அனிருத்தின் யூட்யூப் சேன்னலில் இப்பாடல் வெளிவந்தது. ஆனால் தற்போது இப்பாடல் அவரது யூட்யூப் தளத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது.

எனினும் இப்பாடல் ஆடியோ வடிவில் தற்போது வெளிவந்துள்ளது. ரசிகர்கள் இரவு 9 மணிக்குதான் இப்பாடல் வெளிவரும் என ஆவலோடு காத்துக்கொண்டிருக்கையில் திடீரென இப்பாடல் வெளியானது ரசிகர்களை சற்று கோபத்தில் ஆழ்த்தியிருந்தாலும் இப்பாடல் அவர்கள் ரசிக்கும் விதமாக அமைந்துள்ளதாக கொண்டாடி வருகின்றனர்.
