ARTICLE AD BOX
மீண்டும் இணையும் அனுபமா – சமந்தா
பிரவின் கந்த்ரேகுலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் “பரதா” திரைப்படத்தில் பிரபல நடிகை சமந்தா கேமியோ ரோலில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“பிரேமம்” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை அனுபமா பரமேஸ்வரன்,அதன் பின்னர் தெலுங்கு,தமிழ் மற்றும் மலையாள மொழிப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான “டிராகன்” படம் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது.

தற்போது,அனுபமா பரமேஸ்வரன் “பரதா” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இப்படத்தை பிரவின் கந்த்ரேகுலா இயக்குகிறார்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர்,ஒரு கிராமப்பெண்ணின் சாகசப்பயணத்தை மையமாகக் கொண்டு நகர்கிறது.கிராமங்களில் பெண்கள் பரதா அணிவது பற்றிய சமூகப் பின்னணியுடன்,பெண்களின் வாழ்க்கையை அலசும் வகையில் கதை அமைந்துள்ளது.
இந்தப் படம் தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.இந்நிலையில்,இப்படத்தில் நடிகை சமந்தா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே, அனுபமா பரமேஸ்வரன் மற்றும் சமந்தா இணைந்து நடித்த “A Aa” திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
