ARTICLE AD BOX
சினிமாவில் உள்ள உச்ச நடிகர்களுடன் ஒரு பாட்டில் ஆவது தலையை காட்டி விட வேண்டும் என சக நடிகைகள் விரும்புவது உண்டு. அப்படித்தான் ரஜினி, விஜய், அஜித்துடன் ஜோடி போட நடிகைகள் போட்டி போடுவது உண்டு.
அப்படி ரஜினியுடன் ஒரு பாட்டுக்கு டான்ஸ் அடிய வாய்ப்பு கிடைத்து, 5 நாள் படப்பிடிப்பு நடத்தி கடைசியில் என் காட்சி படத்தில் வரவே இல்லை என பிரபல நடிகை மம்தா மோகன்தாஸ் வருத்தப்பட்டுள்ளார்.
இதையும் படியுங்க : 20 ஆண்டுகளாக சம்பளம் இல்லை…பாலிவுட்டில் அசத்தும் பிரபல நடிகர்.!
மலையாள நடிகையான மம்தா மோகன் தாஸ் சிவப்பதிகாரம் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தனக்கு வந்த வாய்ப்பை நயன்தாரா தட்டிப் பறித்துள்ளார் என குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்த சமீபத்திய பேட்டியில், ரஜினியுடன் குசேலன் படத்தில் நடிக்க சான்ஸ் கிடைத்தது. ஒரு சில காட்சிகள் மட்டுமே வரும் அவர், ரஜினியுடன் சேர்ந்து ஆடும் வாய்ப்பும் கிடைத்தது. கிட்டத்தட்ட 4,5 நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. ஆனால் படத்தில் என்னுடைய காட்சிகள் வரவில்லை.

இதைப் பார்த்ததும் நான் ஷாக் ஆகிவிட்டேன். நானும், ரஜினி சாரும், நயன்தாராவும் அந்த பாடல் காட்சியில் இருந்தோம். ஆனால் படம் வெளியான பிறகு என்னுடைய ஃபிரேம் படத்தில் இல்லை. ஒரு காட்சியில் மட்டும் அந்த பாட்டில் நான் வந்திருப்பேன்.
— Shinnu°™ (@_shadychan) March 6, 2025பின்னர் தான் புரிந்தது, எந்த நடிகையுடனும் இணைந்து நடனமாட முடியாது என நயன்தாரா கறாராக கூறியுள்ளார். என் காட்சியை நீக்கப்பட்டதால் என்னுடைய கேரியரிலும் அடி விழுந்தது என மம்தா மோகன் தாஸ் வருத்தமாக பேசியுள்ளார்.
