ARTICLE AD BOX
ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படத்தின் வெளியீட்டிற்காக இந்திய ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர். எங்கு திரும்பினாலும் “கூலி” திரைப்படத்தை பற்றியே பேசிக்கொண்டிருக்கின்றனர். படக்குழுவினர் புரொமோஷன் பணிகளை துவங்குவதற்கு முன்பே தானாகவே இத்திரைப்படத்திற்கு ஹைப் ஏறியுள்ளது.
“கூலி” திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “Chikitu”, “மோனிகா” ஆகிய பாடல்கள் சிங்கிள்களாக வெளிவந்து பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஒரு ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த லோகேஷ் கனகராஜ் , “கூலி” திரைப்படத்தின் வசூல் குறித்து பேசியுள்ளது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

என்னால் உத்தரவாதம் கொடுக்க முடியாது
“கைதி திரைப்படம் வெளியானபோது என்னிடம் கைதி எவ்வளவு வசூல் ஆகியிருக்கிறது என எவரும் கேட்கவில்லை. ஆனால் கைதி திரைப்படத்திற்கு பின் கலெக்சன் குறித்து மட்டுமே கேட்கிறார்கள். அதில் அவர்களுக்கு அப்படி என்ன சந்தோஷம் என தெரியவில்லை. நான் கமல் ரசிகனாக இருந்தபோது வசூல் குறித்தெல்லாம் கவலை இருந்ததில்லை. படம் 50 நாட்கள் ஓடியதா? 100 நாட்கள் ஓடியதா? அல்லது ஓடவே இல்லையா? என்பதுதான் விஷயமாக இருந்தது.
ஆனால் இப்போது வசூலை பற்றிதான் ரசிகர்கள் பேசுகிறார்கள். இது எப்போது தொடங்கியது என எனக்கு தெரியவில்லை. இது சரியான ஒன்று என எனக்கு தோன்றவில்லை.

கூலி திரைப்படம் ரூ.1000 கோடி தொடுமா என்பது போல் பலரும் கேட்கின்றனர். 1000 கோடிக்கு என்னால் உத்தரவாதம் கொடுக்க முடியாது. ஆனால் ரூ.150க்கு டிக்கெட் வாங்கி எனது படத்தை பார்ப்பவர்களுக்கு உத்தரவாதம் கொடுக்க முடியும். அந்த ரூ.150க்கு படம் வொர்த்தாக இருக்கும் என்று” என லோகேஷ் கனகராஜ் பேட்டியளித்துள்ளார். இந்த பேட்டி பலராலும் பாராட்டப்பட்டு வந்தாலும் “கூலி” திரைப்படம் ரூ.1000 கோடி பந்தயம் அடிக்கும் என ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் வேளையில் லோகேஷ் இவ்வாறு பேசியது அவர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.
