ARTICLE AD BOX
கூலி பவர் ஹவுஸு…
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “Chikitu”, “மோனிகா” ஆகிய பாடல்கள் ஏற்கனவே சிங்கிள்களாக வெளிவந்து பட்டையை கிளப்பிய நிலையில் இத்திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான “பவர் ஹவுஸ்” பாடல் வெளியாகி ரசிகர்களை துள்ளாட்டம் போட வைத்துள்ளது. முழுக்க முழுக்க ரஜினிக்காகவே எழுதப்பட்ட இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் ஒரு புதுவித Vibe-ஐ உருவாக்கியுள்ளது.

இப்பாடலை தெருக்குரல் அறிவு எழுதி அனிருத்துடன் இணைந்து இப்பாடலை பாடியும் உள்ளார். இப்பாடல் ரஜினிகாந்த் கதாபாத்திரத்தின் தீம் இசையாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ்ஜின் வாட்ஸ் ஆப் DP?
இப்பாடல் வெளியாவதற்கு முன் இப்பாடலின் புரொமோ வீடியோ ஒன்று வெளியானது. அதில் “கூலி” படத்தின் வாட்ஸ் ஆப் குழுவில் லோகேஷ் கனகராஜ் “பாடல் ரெடியா?” என கேட்க அதற்கு அனிருத் அந்த குரூப்பில் பாடல் அனுப்புவது போன்ற காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது.

அதில் லோகேஷ் கனகராஜ் “லியோ” படத்தில் விஜய் இடம்பெற்ற ஒரு புகைப்படத்தை வாட்ஸ் ஆப் DP ஆக வைத்திருந்தது பலரின் கவனத்தை குவித்தது. இதன் ஸ்கிரீன்ஷாட் இணையத்தில் வைரல் ஆகி வந்த நிலையில் ரஜினி ரசிகர்கள் கடுப்பாகியுள்ளதாக தெரிய வருகிறது. சமூக வலைத்தளத்தில் இந்த ஸ்கிரீன்ஷாட்டால் ரஜினி ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.
