ARTICLE AD BOX
படுதோல்வியடைந்த லால் சலாம்!
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், நிரோஷா, தம்பி ராமையா உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான திரைப்படம் “லால் சலாம்”. இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸில் படுதோல்வியடைந்தது.
அதனை தொடர்ந்து ஒரு பேட்டியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இத்திரைப்படத்தின் சில முக்கிய Footage-கள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் தொலைந்துப்போய்விட்டதாகவும் அதன் காரணமாகத்தான் இத்திரைப்படம் சரியாக போகவில்லை என்றும் கூறினார். இதனை தொடர்ந்து “லால் சலாம்” திரைப்படத்தின் ஓடிடி வியாபாரம் பாதிக்கப்பட்டது. எனினும் தொலைந்துப்போன ஹார்ட் டிஸ்க் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அதில் இடம்பெற்ற காட்சிகளை படத்தில் இணைத்து “சன் நெக்ஸ்ட்” ஓடிடி தளத்தில் இத்திரைப்படம் வெளியிடப்பட்டது.

ரஜினிதான் காரணம்?
இந்த நிலையில் “லால் சலாம்” திரைப்படத்தின் தோல்வி குறித்து நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் பகிர்ந்துகொண்டது ரஜினிகாந்த் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
“லால் சலாம் திரைப்படம் தொடங்கப்பட்டபோது நான்தான் ஹீரோவாக இருந்தேன். ரஜினிகாந்த் சார் கேமியோ ரோலில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அதன் பின் ரஜினி சார் படம் முழுவதும் வருவது போல் மாற்றப்பட்டது. என்னுடைய கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டது. ரஜினி சாரை பார்வையாளர்கள் ரசிப்பார்கள் என நினைத்தோம், ஆனால் அது ஒர்க் அவுட் ஆகவில்லை” என கூறினார்.
விஷ்ணு விஷால், “லால் சலாம்” திரைப்படத்தின் தோல்விக்கு ரஜினிகாந்துதான் காரணம் என மறைமுகமாக கூறுவதாக சமூக வலைத்தளங்களில் ரஜினி ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.