ARTICLE AD BOX
ஜெயிலர் 2 பட பெயரை சொல்லி மோசடி
நடிகை ஷைனி சாரா,ரஜினிகாந்தின் மனைவி வேடத்தில் நடிக்க வாய்ப்பு என்று கூறி ரூ.12,500 மோசடி நடந்ததாக பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.
மகேஷிண்டே பிரதிகாரம் படத்தில் அறிமுகமான ஷைனி சாரா,தமிழ் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி தன்னை ஏமாற்ற முயன்றதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படியுங்க: தனுசுக்கு பதில் இவரா…வட சென்னை 2 படத்தில் அதிரடி முடிவு..!
அதில் அவர் கூறியது ஒருநாள் எனது வாட்ஸ்அப் எண்ணுக்கு,ஒரு நடிகர் தேர்வு நிறுவனத்திலிருந்து எனது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஒரு செய்தி வந்தது.அதுவும் ‘ஜெயிலர் 2’ படத்தில் ரஜினிகாந்தின் மனைவி வேடத்திற்கு நடிகைகளைத் தேர்வு செய்வதாகவும்,கலைஞர் அட்டை இருக்கிறதா என்றும் கேட்டார்கள்.
மலையாளத்தில் அப்படி ஒரு அட்டை கிடையாது என்று சொன்னதும்,அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாகக் கூறி,சுரேஷ் குமார் என்ற ஒருவரிடமிருந்து அழைப்பு வரும் என்றார்கள்.
இரண்டு நாட்கள் கழித்து,சேலை அணிந்து கொண்டு காணொளி அழைப்பு நேர்காணலுக்கு வருமாறு எனக்கு அழைப்பு வந்தது,அந்த அழைப்பில் பேசிய சுரேஷ் குமார்,தன்னை ஒரு முக்கியமான சினிமா பிரபலமாக அறிமுகப்படுத்திக் கொண்டு,நான் ‘ஜெயிலர் 2’ படத்திற்காக தேர்வாகியுள்ளதாக கூறினார்.
இதனால் குழப்பமடைந்த நான்,ரஜினிகாந்தின் மனைவியாக ஏற்கனவே ரம்யா கிருஷ்ணா நடிக்கிறார் தானே என்று கேட்டேன்,அதற்கு அவர்,இது வேறு படம் எனக் கூறினார்.பின்னர் எனது கலைஞர் அட்டைக்கான விண்ணப்பத்தையும்,ஆதார் அட்டையும், புகைப்படத்தையும் அனுப்புமாறு கேட்டார்.
அதன் பிறகு,கலைஞர் அட்டைக்கான தொகையாக ரூ.12,500 உடனடியாக செலுத்துமாறு கேட்டார்,எனக்கு அப்போது அவருடைய பேச்சில் சந்தேகம் ஏற்பட்டது.முழுத் தொகையையும் செலுத்த இரண்டு நாட்கள் ஆகும் என்று கூறினேன்,ஆனால், முதற்கட்டமாக பணம் அனுப்புமாறு அவர் அழுத்தம் கொடுத்தார்.
பின்னர்,ஒரு கோலிவுட் நடிகரைத் தொடர்பு கொண்டபோது,தமிழ் திரைப்படத் துறையில் வேலை பெற கலைஞர் அட்டை கட்டாயம் தேவையில்லை என்பதையும், இதுபோன்ற மோசடிகள் ஏற்கனவே நடந்துள்ளன என்பதையும் அவர் என்னிடம் தெரிவித்தார்.
இதுபோன்று பலரும் ஏமாற்றப்பட்டிருக்கலாம்,மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்,எனவே, 7535801976 என்ற எண்ணிலிருந்து வரும் அழைப்புகளை ஏற்கவேண்டாம் என்று நடிகை ஷைனி சாரா மக்களை எச்சரித்துள்ளார்.

7 months ago
86









English (US) ·