ARTICLE AD BOX
ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. எங்கு திரும்பினாலும் “கூலி” திரைப்படத்தை குறித்தே பேச்சுக்கள் வலம் வருகின்றன.
இத்திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் ஸ்ருதிஹாசன், சத்யராஜ், சௌபின் சாஹிர், நாகர்ஜுனா, உபேந்திரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தின் “Chikitu”, “மோனிகா” ஆகிய பாடல்கள் ஏற்கனவே வெளிவந்து பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் கதை Letterboxd என்ற சினிமா தொடர்பான செயலியின் மூலம் இணையத்தில் கசிந்துள்ளது.

தாறுமாறான கதை
தனது பழைய மாஃபியா கும்பலை உயிர்பிக்க, ஒரு வயதான தங்க கடத்தல்காரர் திருடப்பட்டு விண்டேஜ் தங்க கைக்கடிகாரங்களில் மறைத்துவைக்கப்பட்ட ஒரு டெக்னாலஜியை பயன்படுத்துகிறார். ஆனால் தனது சாம்ராஜ்யத்தை மீட்டெடுக்கும் திட்டம் அவரை குற்றத்தாலும் நேர ஒழுங்கு இல்லாமலும் உருவான ஒரு தனி உலகத்திற்கு கொண்டு செல்கிறது. இதுதான் “கூலி” படத்தின் கதை என அதில் கூறப்பட்டுள்ளது. இதன் மூல “கூலி” திரைப்படம் ஒரு டைம் டிராவல் திரைப்படமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

“Letterboxd” செயலியில் குறிப்பிடப்பட்டுள்ள இக்கதை ஸ்கிரீன் ஷாட்டாக இணையம் முழுவதும் பரவி வருகிறது.
