ARTICLE AD BOX
கயாடு லோஹர் என சொன்னாலே இளம் ரசிகர்கள் ஆப்ரித்துக்கொள்வர். ஒரே ஒரு படம் மூலம் தமிழ் இளம் ரசிகர்களின் மனதில் பசை போல ஒட்டிக்கொண்டவர்.
டிராகன் படத்தில் நடத்ததின் மூலம் பாப்புலரான கயாடு லோஹர் காட்டில் நல்ல மழை என்றே சொல்லலாம். பிரதீப் ரங்கநாதனுடன் டிராகன் படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் கவர்ச்சியாக வலம் வந்த கயாடு லோஹரை இளம் தலைமுறையினர் தலையில் வைத்து கொண்டாடி வருகின்றனர்.
நடிப்பு திறமையும், கவர்ச்சியையும் காட்டிய கயாடுவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது இதயம் முரளி படத்தில் அதர்வாவுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார்.
தொடர்ந்து சிம்புவின் 49வது படத்துக்கு கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்ததாக 19ஆம் நூற்றாண்டு என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் வீடியோதான் தற்போது ரசிகர்களை வெகுவாக பாதித்துள்ளது.
 அந்த படத்தில் நடித்துள்ள கயாடு லோஹர் ரத்தம் கலந்த மேக்கப்புடன் வீடியோவில் தோன்றியுள்ளார். படப்பிடிப்புக்கு அவர் தயாராவதை பார்த்த ரசிகர்கள், உண்மையில் கயாடு லோஹருக்கு அடிப்பட்டு விட்டதா என பதறினர்
பின்னர் தான், அது படப்பிடிப்புக்காக மேற்கொள்ளப்பட்ட மேக்கப் என்பதை அறிந்து கொண்ட ரசிகர்கள், படத்துக்காக அர்ப்பணிப்புடன் நடித்து வரும் அவரை திறமையை பாராட்டி வீடியோவை அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.
 
                        4 months ago
                                47
                    








                        English (US)  ·