ரத்தத்தில் சிலை…கொடூர வலி…ஷிகான் ஹுசைனி மரணத்தின் பின்னணி.!

1 month ago 34
ARTICLE AD BOX

ஷிகான் ஹுசைனியின் மரணம்

ரத்த புற்றுநோயால் சிகிச்சை பெற்று வந்த ஷிகான் ஹுசைன் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.இவர் தான் இறந்துவிடுவேன் என தெரிந்தும் மிக மன வலிமையுடன் மருத்துவமனையில் போராடி வந்தார்.

இதையும் படியுங்க: யார்ரா அந்த பையன்..மிரண்டு போன லக்னோ டீம்‌..அசத்திய டெல்லி ஹீரோ.!

தமிழ்நாட்டில் போர்த்திறன் கலைகளில் சாதனைகளைப் படைத்தவர்.கராத்தே மற்றும் வில்வித்தையில் உலகளவில் மூன்று முறை வெற்றி பெற்ற இவர், திரைப்படத்துறையிலும்,தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று மக்களிடம் பிரபலம் ஆனார்.

2001 ஆம் ஆண்டு விஜய் நடித்த “பத்ரி” திரைப்படத்தில் குத்துசண்டை பயிற்சியாளராக நடித்தது அனைவருடைய கவனத்தை ஈர்த்தது.

இவர் ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளராக இருந்தார்.இதன் ஒரு வெளிப்பாடாக,101 கார்களை தன்னுடைய கையில் ஏற்றி,அதிலிருந்து வடிந்த ரத்தத்தால் ஜெயலலிதாவின் உருவப்படம் வரைந்தார். இதை அறிந்த ஜெயலலிதா அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.

மேலும்,சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த ஜெயலலிதா விடுதலையாக வேண்டும் என்று விரும்பி,அவர் சிலுவையில் தன்னை அறைந்துகொண்டு பிரார்த்தனை செய்த சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுமட்டுமில்லாமல் 8 ஆண்டுகளாக தனது உடலிலிருந்து 24 பாட்டில் ரத்தம் சேமித்து, அதனுடன் வில்வித்தை வீரர்களின் ரத்தத்தையும் சேர்த்து ஜெயலலிதா சிலையை உருவாக்கியதாக கூறினார்.அவரது இந்த செயல்கள் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, ஜெயலலிதாவால் கண்டனம் பெறவும் செய்தது.

இப்படி ரெத்ததால் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்த அவருக்கு இறுதியில் ரத்த புற்றுநோய் பாதிப்புக்குள்ளானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் இவருடைய இந்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.

  • Shihan Hussaini viral incidents ரத்தத்தில் சிலை…கொடூர வலி…ஷிகான் ஹுசைனி மரணத்தின் பின்னணி.!
  • Continue Reading

    Read Entire Article