ARTICLE AD BOX
ஓடும் ரயிலில் ஒரு ஆண் பயணிக்கு மற்றொரு ஆண் பயணி முத்தம் கொடுக்க முயன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், ஆண் பயணி தூங்கிக் கொண்டிருந்தபோது வாலிபர் ஒருவர் அவருக்கு முத்தம் கொடுக்க முயற்சி செய்துள்ளார். உடனே சுதாகரித்துக் கொண்ட அவர் தூக்கத்தில் இருந்து எழுந்த நிலையில் தடுக்க முயற்சித்தார்.
இருப்பினும் அந்த வாலிபர் அவரை விடாது கட்டாயப்படுத்தி உதட்டில் முத்தம் கொடுக்க முயற்சி செய்யும் போது உடனடியாக சக பயணிகள் அந்த வாலிபரை தடுத்தனர்.

மேலும் அந்த வாலிபரிடம் ஆண் பயணியின் மனைவி சண்டை இடுகிறார். இருப்பினும் அந்த வாலிபர் தனக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்று தோன்றியதால் அப்படி செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆனால் சொல்லிவிட்டே மீண்டும் முத்தம் கொடுக்க முயற்சி செய்கிறார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் எங்கு நடந்தது என்று தெரியவில்லை. வைரலாகும் வீடியோவால் நெட்டிசன்கள் கடுமையான விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர். காலம் கலிகாலம் ஆகிவிட்டது. ஆண்களுக்கு கூட பாதுகாப்பு இல்லை என சரமாரியான விமர்சனம் எழுகிறது.
