ARTICLE AD BOX
கடலூர் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதையும் படியுங்க: ரிதன்யா பிரேத பரிசோதனையில் பகீர் தகவல்? குற்றவாளிகள் தப்ப முடியாது.. வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி!
இந்த சம்பவத்திற்கு காரணம், ரயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மாதான் என கூறி பொதுமக்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். இதையடுத்து அவரை மீட்ட போலீசார், மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் ரயில் மோத காரணம் வேன் ஓட்டுநர் தான், அவர் தான் கேட்டை திறக்க கேட் கீப்பரிடம் கூறியுள்ளார் என தெற்கு ரயில்வே விளக்கமளித்தது. ஆனால் நான் கேட் கீப்பரிடம் பேசவே இல்லை என வேன் ஓட்டுநர் மறுத்தார்.
 இந்த நிலையில் நேற்று இரவு கேட் கீப்பர் பங்கஜ் சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், ரயில் வரும் போது தூங்கி கொண்டிருந்ததாக அவரே ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரயில் வருவதை அறிந்து ஸ்டேஷன் மாஸ்டர் தொலைபேசியல் அழைத்த நிலையில், பங்கஜ் போனை எடுக்காமல் தூங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஏற்கனவே 5 முறை கேட் கீப்பர் இது போன்று ரயில் வரும் போது தூங்கி உள்ளதாக விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
                        3 months ago
                                50
                    








                        English (US)  ·