ARTICLE AD BOX
நடிகர் ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார். பின்னர் தனது பெயரை ரவி மோகன் என மாற்றினார். தனது கம்பெனியை மும்பைக்கு மாற்றியது எல்லாமே பேசு பொருளானது.
அதைவிட அவர் பாடகி கெனிஷாவுடன் கிசுகிசுக்கப்பட்டார். கெனிஷா உடன் ஏற்பட்ட காதல்தான் ஆர்த்தியை பிரிய வைத்தது என பல விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் ரவி இதை மறுத்திருந்தார்.
இதையும் படியுங்க: சேலை கட்டத் தெரியாத மலையாள ஓமணக்குட்டி : மாளவிகா மோகனன் VIDEO!
அண்மையில் ரவி மோகனும், கெனிஷாவும், ஐசரி கணேஷ் வீட்டு திருமண நிகழ்வில் ஒன்றாக பங்கேற்றது பெரும் சர்ச்சையானது. ரவி மீது அவர்களது ரசிகர்களே விமர்சனங்களை முன் வைத்தனர்.
ஆர்த்தியுடன் விவாகரத்துக்கு கெனிஷாதான் காரணம் என மீண்டும் இணையத்தில் விவாதங்கள் எழுந்தது. இதையடுத்து அதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் கெனிஷா விளக்கமளித்துள்ளார்.

அதில், இதையெல்லாம் பார்த்துட்டு என்னால் சும்மா இருக்க முடியாது, நான் ரவியை சந்தித்ததே அவரது விவாகரத்துக்கு பின் தான். என் மீது சுமத்தப்படும் குற்றம் உண்மையல்ல, நான் பாடிய ‘இதை யார் சொல்வாரோ’பாடல் வெளியிட்டதே ரவி தான். அப்போதுதான் அவரை நான் நேரில் பார்க்கிறேன்.
மனைவியை பிரிந்த பின் என்னிடம் தெரபிக்காக வந்தார். சென்னையில் உள்ளவர்களுக்கு தெரியவேண்டாம் என்பதற்காக பெங்களூருவில் தெரபிக்காக வந்தார். அவரை என்னுடை கிளையண்டாக நான் முதலில் ஏற்கவில்லை.

அவருடை பிரச்சனை என்ன என்பதை அறிந்து, அவருக்கு எப்படி உதவி செய்ய முடியும் என்பதை உறுதி செய்த பின்னரே உதவி செய்ய விரும்பினேன். மனைவியால் எமோஷனலாக ரவி பாதிக்கப்பட்டுள்ளார். ரவிக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கககூடாது என கூறியுள்ளார்.
