ARTICLE AD BOX
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ரவி மோகன். தொடாந்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வந்த அவருக்கு சமீபகாலமாக ஒரு ஹிட் படம் கூட அமையவில்லை.
சொந்த வாழ்க்கையிலும் அவருக்கு சறுக்கலாகவே அமைந்தது. ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்த ரவி மோகனுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளது. சமீபத்தில் மனைவியை பிரிவதாக அறிவித்த ரவி மோகன், விவாகரத்து வழக்கும் தொடர்ந்தார்.
இதற்கு ஆட்சேபனை தெரிவித்த ஆர்த்தி, ரவி மீது புகார்களை கூற, இருவரும் மாறி மாறி புகார்களை கூறி வந்தனர். இதற்கிடையில் தனியாக வசித்த ரவி, பாடகி கெனிஷாவுடன் பொதுவெளியில் வலம் வர ஆரம்பித்தார்.
இருவரும் நண்பர்கள் என கூறி வரும் நிலையில், சமீபத்தில் ரவி மோகன் ஆரம்பித்த தயாரிப்பு கம்பெனியின் தொடர்பான விழாவில், கெனிஷாவும் ரவியும் ஒரே மாதிரி நிறத்தில் உடையணிந்து வந்தனர்.
மேலும் அந்த நிகழ்ச்சியில் எனக்கு வாழ்க்கை கொடுத்தது கெனிஷாதான். எனக்கு கடவுள் தந்த பரிசு கெனிஷா என புகழ்ந்து பேச, அரங்கில் அமர்ந்திருந்த கெனிஷா ஆனந்த கண்ணீர் வடித்தார்
ஒரு பக்கம் இது குறித்து நெட்டிசன்கள் விமர்சனம் செய்ய, ஆர்த்தி போட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. அதில் மேடைகள் கதைகளைத்தான் சரியானதாக காட்ட முடியும், ஆனால் நிகழ்ச்சிகளில் வாழ்க்கையை வாழ முடியாது என பதிவிட்டுள்ளார்.
மேலும் தனது குழநதைகள்தான் கடவுளின் பரிசு.. வலிமை என்பது அன்றாடத்தில், நாம் உண்மையாக முக்கியமானவர்களுக்காக செய்யும் தேர்வுகளில் கட்டமைக்கப்படுகிறது. ஆகஸ்ட் கொண்டு வந்த குழப்பங்கள் மற்றும் இடைவெளிகளில் கூட, எந்த ஒளியும் மிஞ்ச முடியாத ஒரு உண்மை இது என பதிவிட்டுள்ளார்.
