ரவீனாவுக்கு ரெட் கார்டு… சின்னத்திரை பக்கமே தலைகாட்டக்கூடாது : அதிரடி உத்தரவு!

1 week ago 15
ARTICLE AD BOX

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல திரைப்படங்களில் நடித்து வந்தவர் ரவீனா தாஹா. தொடர்ந்து சீரியல்களில் கமிட் ஆனார்.

இவர் ஜீ தமிழில் பூவே பூச்சூடவா சீரியலில் நடிக்க தொடங்கினார். பின்னர் விஜய் டிவியில் மௌன ராகம் 2 சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதையும் படியுங்க: பிரபலத்தின் மகனுடன் திருமணம்… சில்க் ஸ்மிதா குறித்து நடன இயக்குநர் ஓபன்!

அதில் தனது நடிப்பு திறமையால் அனைவரையும் கவர்ந்தார். மௌன ராகம் சீரியல் மூலம் பிரபலமான ரவீனா, பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

91 நாட்கள் அந்த நிகழ்ச்சியில் தாக்குபிடித்த ரவீனா, பின்னர் வெளியேறினார். தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் நடனத்தை பதிவிட்டு வந்தார்.

இந்த நிலையில் அவருக்கு மீண்டும் சிந்து பைரவி சீரியிலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதில் கமிட் ஆன ரவீனா திடீரென விலகுவதாக அறிவித்தார்.

இதனால் கடுப்பான தயாரிப்பாளர்கள், ரவீனாவுக்கு ரெட் கார்டு கொடுத்துள்ளனர். சீரியல் மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாதபடி ரெட்டு கார்டு கொடுத்துள்ளனர்.

 Action order!

இது குறித்த தகவல் காட்டுத் தீ போல இணையத்தில் பரவியது. இதையடுத்து விளக்கம் அறித்து ரவீனா, ரெட் கார்டு கொடுக்கப்பட்டது உண்மைதான், சிந்து பைரவி சீரியலில் என்னுடைய கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லை என்பதால் விலகினேன் என கூறினார்.

மேலும் சின்னத்திரையில் தலை காட்டக்கூடாது என்பதெல்லாம் வதந்தி, நாங்கள் இந்த விஷயத்தை சுமூகமாக பேசி முடித்துவிட்டோம் என கூறினார்.

தற்போது ஜீ தமிழில் டான்ஸ் ரியாலிட்டி ஷோக்களின் ரவீனா போட்டியாளராக பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  •  Action order! ரவீனாவுக்கு ரெட் கார்டு… சின்னத்திரை பக்கமே தலைகாட்டக்கூடாது : அதிரடி உத்தரவு!
  • Continue Reading

    Read Entire Article