ARTICLE AD BOX
ராகுல் காந்திக்கு சிக்கல் ஏற்படுத்தும் விதமாக நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
2018ஆம் ஆண்டில் நடந்த காங்கிரஸ் கூட்டம் ஒன்றில் ராகுல் காந்தி பேசிய போது, அப்போது பாஜக தலைவராக இருந்த அமித்ஷா குறித்து சர்ச்சையான விமர்சனங்களை முன்வைத்தார்.
இதையும் படியுங்க: தமிழகத்தில் எங்கெல்லாம் ரெட் அலர்ட்? விடுமுறைக்காக வெளிய போற பிளான் இருக்கா? வானிலை எச்சரிக்கை!
இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்புகளை பாஜக முன் வைத்த நிலையில், பாஜகவை சேர்ந்த பிரதாப் கட்டியார், அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவை அடுத்து இந்த வழக்கு 2020ல் ராஞ்சியில் உள்ள எம்பி, எம்எல்ஏக்களை விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் பலமுறை சம்மன் அளித்து ராகுல் ஆஜராகவில்லை.
இந்த நிலையில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க ராகுல் காந்தி கோரிக்கை வைத்தார். இதை நிராகரித்த நீதிமன்றம், ஜாமீனில் வெளிவர முடியாதபடி பிடிவாரண்ட் பிறப்பித்தது.
மேலும் வரும் ஜூன் 26ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனால் ராகுல் காந்திக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.