ராஜேஷின் கடைசி ஆசை இதுதான்? அதுக்குள்ள இப்படியா ஆகணும்!

1 month ago 32
ARTICLE AD BOX

திடீர் மரணம்

கே பாலச்சந்தரின் “அவள் ஒரு தொடர்கதை” திரைப்படத்தின் மூலம்  சினிமாவிற்குள் அறிமுகமான ராஜேஷ், “கன்னிப் பருவத்திலே” திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். “மகாநதி”, “தர்மதுரை” ஆகிய திரைப்படங்களில் இவரது கதாபாத்திரம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

actor rajesh last wish was direct kamal movies

சினிமா மட்டுமல்லாது “ஓம் சரவண பவ” என்ற யூட்யூப் சேன்னலையும்  நடத்தி வந்தார். மேலும் ரியல் எஸ்டேட், ஹோட்டல் போன்ற தொழில்களிலும் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் இன்று காலை உடல் நிலை சரியில்லாமல் போக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முற்பட்டனர். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இவரின் மரணச் செய்தி தமிழ் சினிமா உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவரது இறப்பிற்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட பல பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். 

ராஜேஷின் கடைசி ஆசை

actor rajesh last wish was direct kamal movies

இந்த நிலையில் ராஜேஷின் கடைசி ஆசை குறித்து ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது ராஜேஷ் கமல்ஹாசனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும் என ஆசைப்பட்டாராம். ஆனால் அவரால் கடைசி வரை அந்த ஆசையை நிறைவேற்ற முடியவில்லையாம். இவர் கமல்ஹாசனுடன் “மகாநதி”, “விருமாண்டி” ஆகிய திரைப்படங்களில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

  • actor rajesh last wish was direct kamal movies ராஜேஷின் கடைசி ஆசை இதுதான்? அதுக்குள்ள இப்படியா ஆகணும்!
  • Continue Reading

    Read Entire Article