ARTICLE AD BOX
ராஜேஷ் மரணம்
இன்று காலை தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவமாக அமைந்துள்ளது நடிகர் ராஜேஷின் மரணச் செய்தி. கிட்டத்தட்ட 150க்கும் மேலான திரைப்படங்களில் நடித்த நடிகர் ராஜேஷ், “ஓம் சரவண பவ” என்ற யூட்யூப் சேன்னலையும் நடத்தி வந்தார். மேலும் ரியல் எஸ்டேட், ஹோட்டல் ஆகிய தொழில்களிலும் ஈடுபட்டு வந்தார்.
இவர் சினிமா குறித்த பல புத்தகங்களையும் எழுதியுள்ளார். இந்த நிலையில் இன்று காலை உடல் நிலை சரியில்லாமல் போன நிலையில் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது.
தாமதமாக்கிய சித்த மருத்துவர்
இந்த நிலையில் ராஜேஷின் இரங்கல் கூட்டத்தில் பத்திரிக்கையாளருக்கு பேட்டியளித்த ராஜேஷின் சகோதரர் சத்யன், “அண்ணன் பைபாஸ் சர்ஜரி செய்திருந்ததால் அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று வருவார். இன்று காலை 6 மணிக்கு என்னை அண்ணன் அழைத்திருந்தால் நான் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருப்பேன்.
ஆனால் காலை 6 மணிக்கு ஒரு சித்தா டாக்டர் வந்தார். அவர் பேசி பேசியே 8 மணி வரை நேரத்தை கடத்திவிட்டார். அதன் பிறகுதான் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். நெஞ்சு வலி இருப்பதாக அண்ணன் கூறவில்லை. இரவு முழுவதும் தூங்கவில்லை. காலை 6 மணிக்கு அசௌகரியமாக உணர்ந்த பின் தாமதமாக மருத்துவமனையில் அனுமதித்ததுதான் தவறாகிப்போனது” என கூறி பகீர் கிளப்பியுள்ளார். நடிகர் ராஜேஷ் சித்த மருத்துவ முறையில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

5 months ago
61









English (US) ·