ARTICLE AD BOX
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவரது கட்சியினர் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
சென்னையில் நிருபர்களை சந்தித்த பாமக எம்.எல்.ஏ அருள் தெரிவித்ததாவது: “ராமதாஸ் அவர்களின் தைலாபுரம் இல்லத்தில் ஒட்டுக்கேட்பு கருவி மற்றும் சிசிடிவி பதிவுகளை அன்புமணி தரப்பினர் வைத்துள்ளனர். இதை காவல்துறையினர் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக விசாரிக்க வேண்டும்.

மேலும், சமூக வலைதளங்களில் ‘ராமதாஸ் கொலை செய்யப்படுவார்’ என்ற அதிர்ச்சிகரமான பதிவுகளையும் அன்புமணி ஆதரவாளர்களே வெளியிட்டு வருகின்றனர். இதனால், அவரை கொலை செய்யும் நிலைக்கு அவர்கள் சென்றுவிட்டனர் என்பதைக் காட்டுகிறது.
அதனால், இந்த சம்பவத்தில் காவல்துறையினர் தாமதிக்காமல் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.
