ARTICLE AD BOX
தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்து இன்றும் ரசிகர்களால் போற்றப்படுபவர் ராமராஜன். திரைமறைவில் பலருக்கும் உதவி செய்து வருபவர். சிகெரெட், மது என எந்த பழக்கமும் இல்லாமல் சினிமாவிலும் அதை காட்டாமல் நடித்தவர். இப்படி பலவிதமான நல்ல குணமுடைய ராமராஜன் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வருகிறார். 12 வருடங்களுக்கு பிறகு சமீபத்தில் சாமானியன் படத்தில் நடித்திருந்தார்.
இதையும் படியுங்க : ஆண்ட்ரியாவுக்கு டஃப் கொடுத்த கவின்.. மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகும் மாஸ்க்!
உடன் நடித்த நடிகை நளினியை 1987ல் திருமணம் செய்த ராமராஜன். 2000ஆம் ஆண்டில் விவாகரத்து வாங்கி பிரிந்தார். இருவரும் பிரிந்தாலும் இரட்டைக் குழந்தைகளான மகள், மகன் விழாக்களில் ஒன்று சேர்ந்து வலம் வருகின்றனர்.
இதனிடையே இவர்கள் விவாகரத்துக்கு காரணம் நடிகை அபிதா தான் என கூறப்பட்டது. அபிதா இயக்குநர் பாலா நடித்த சேது படம் மூலம் பிரபலமானார்.
அதற்கு முன் அவர் நடித்த கோல்மால் படம் பெரியதாக கவனிக்கப்படவில்லை. பின்னர் ஒரு சில படங்களில் நடித்து வந்த அவர், ராமராஜனுடன் சீறி வரும் காளை படத்தில் நடித்தார்.

அப்போது இருவருக்கும் காதல் என கிசுகிசுக்கப்பட்டது. எந்த சர்ச்சையிலும் சிக்காத அபிதா, இந்த கிசுகிசுவால் நொந்து போனார். இதனால் சினிமாவை விட்டே ஒதுங்கினார். தொடர்ந்து குடும்பம் குழந்தையுடன் செட்டில் ஆன அவர், 2007ஆம் ஆண்டு புகழ் பெற்ற திருமதி செல்வம் சீரியலில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தினார்.

ஆனால் அதன்பிறகு சொல்லும்படியான வாய்ப்புகள் அமையவில்லை. இருப்பினும் குழந்தைகளுக்காக மீடியாவிடம் இருந்து ஒதுங்கிய அவர், தற்போது மீண்டும் கம்பேக் கொடுத்து வருகிறார். மாரி சீரியலில் நடித்த அவர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.
