ராமாபுரம் மெட்ரோ விபத்து; கோடி ரூபாய் அபராதம்; அதிரடி காட்டிய நிர்வாகம்

1 week ago 27
ARTICLE AD BOX
ramapuram metro mishap  1  crore good  for l&t

சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி பூந்தமல்லி சாலையில் இரவு 9.45 மணியளவில் L&T தலைமை அலுவலகத்தின் அருகே இரண்டு கிரடர்கள் இடிந்து விழுந்தன. இதில் இரு சக்கர வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த ரமேஷ் என்பவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்த விபத்தில் பலியான ரமேஷ் என்பவர் காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்தவர். இவருக்கு மனைவி மற்றும் 10 வயதில் ஒரு மகளும் உள்ளார். 

இது தொடர்பாக மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த விசாரணைக் குழு இந்த விபத்து ஏற்பட்ட காரணத்தை ஆய்வு செய்தது. இந்த ஆய்வில் மெட்ரோ நிறுவனத்தின்  ஒப்பந்ததாரரான L&T நிறுவனத்தின் கவனக்குறைவுதான் இந்த விபத்திற்கு  காரணம் என அறிக்கை சமர்பித்தது. 

இந்த நிலையில் தற்போது L&T நிறுவனத்திற்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்துக்கு நேரடி பொறுப்பாளர்களான L&T நிறுவனத்தின் முதன்மை பாதுகாப்பு மேலாளர், மூத்த ESHS மேலாளர், பாதுகாப்பு பொறியாளர், மூத்த துணை குடியிருப்பு பொறியாளர் ஆகிய நால்வர் மெட்ரோ திட்டப் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 

The station ராமாபுரம் மெட்ரோ விபத்து; கோடி ரூபாய் அபராதம்; அதிரடி காட்டிய நிர்வாகம் appeared archetypal connected Update News 360 | Tamil News Online.

Read Entire Article