ராம் சரண் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் விபத்து? மருத்துவமனைக்கு விரைந்த படக்குழுவினர்!

2 weeks ago 15
ARTICLE AD BOX

முன்னணி நடிகர்

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராம்சரண். “மகதீரா”, “எவடு”, “ரங்கஸ்தலம்” போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்த ராம்சரண், கடந்த 2022 ஆம் ஆண்டு நடித்து வெளிவந்த “RRR” திரைப்படம் வேற லெவலில் ஹிட் அடித்தது. அதனை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்த “கேம் சேஞ்சர்” திரைப்படம் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் தற்போது “Peddi” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

accident occured in ram charan movie the indian house

இவர் நடிப்பில் மட்டுமல்லாது படத் தயாரிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் “கைதி நம்பர் 150”, “சைரா நரசிம்மா ரெட்டி”, “காட் ஃபாதர்” போன்ற திரைப்படங்களை தயாரித்துள்ளார். இந்த வரிசையில் தற்போது “தி இந்தியன் ஹவுஸ்” என்ற திரைப்படத்தை ராம் சரண் தயாரித்து வருகிறார். இத்திரைப்படத்தில் நிகில் என்பவர் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

திடீர் விபத்து

“தி இந்தியன் ஹவுஸ்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தெலங்கானா மாநிலம் ஷாம்ஷாபாத்திற்கு அருகில் நடைபெற்று வரும் நிலையில் இத்திரைப்படத்தில் கடலில் இடம்பெறுவது போன்ற ஒரு காட்சி படமாக்கப்பட்டது. இக்காட்சிக்காக ஒரு மிகப்பெரிய தண்ணீர் டேங் அமைக்கப்பட்டது. படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த சமயத்தில் திடீரென தண்ணீர் டேங் வெடித்ததால் அப்படப்பிடிப்பில் பணியாற்றிக்கொண்டிருந்த பலரையும் வெள்ளம் போல நீர் அடித்துச்சென்றது. இதில் ஒரு உதவி ஒளிப்பதிவாளர் உட்பட சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். எனினும் இதில் அதிர்ஷ்டவசமாக எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை என கூறுகின்றனர். இச்சம்பவம் டோலிவுட் சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

— Whynot Cinemas (@whynotcinemass_) June 12, 2025
  • accident occured in ram charan movie the indian house ராம் சரண் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் விபத்து? மருத்துவமனைக்கு விரைந்த படக்குழுவினர்!
  • Continue Reading

    Read Entire Article