ARTICLE AD BOX
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வரதட்சணத கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் பெற்றோரை திரைப்பட நடிகை அம்பிகா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இதையும் படியுங்க: விஜய் பங்கேற்கும் முதல் போராட்டம்…. அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு : தவெக அறிவிப்பு!
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகை அம்பிகா, விலங்குகளின் உயிர்களுக்கு இருக்கும் மதிப்பு கூட மனிதர்களின் உயிர்களுக்கு இருப்பதில்லை.
 
 நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் வருத்தமளிப்பதாகவே உள்ளது. ரிதன்யாவின் தற்கொலையில் 11 நாட்கள் ஆகியும் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது தாமதமாகிறது.
 மற்ற நாடுகளில் உள்ளது போல நமது நாட்டிலும் தண்டனைகள் கடுமையானால்தான் இதுபோன்ற தற்கொலை மரணங்கள் குறையும்.
 நடிகைதானே வந்து பேசுகிறார் என நினைக்காமல் ரிதன்யாவின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும் என கண்ணீருடன் உருக்கமாக நடிகை அம்பிகா தெரிவித்தார்.
 
                        3 months ago
                                52
                    








                        English (US)  ·