ARTICLE AD BOX
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகேயுள்ள கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகள் ரிதன்யா (வயது 27) திருமணமாகி 78 நாட்களே ஆன நிலையில், வரதட்சணைக் கொடுமை காரணமாக தனது தந்தைக்கு ஆடியோ அனுப்பி வைத்துவிட்டு துயர முடிவு எடுத்தார்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த வழக்கில், ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இவர்கள் மூவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தனர். இம்மனு மீதான விசாரணை நடைபெற்றபோது, காவல்துறை தரப்பு வழக்கறிஞர் மனு குறித்து பதிலளிக்க கூடுதல் அவகாசம் கோரினார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூலை 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.ரிதன்யாவின் தற்கொலை தொடர்பாக அவரது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் நீதி கோரி போராடி வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக அவிநாசியில் பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் வணிகர் சங்கங்கள் இரங்கல் கூட்டங்கள் நடத்தியுள்ளன. மேலும், உரிய நீதி கிடைக்காவிட்டால் தொடர் உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்பு போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
