ARTICLE AD BOX
ஆர்ய – சந்தானம் கலக்கல் காம்போவில் வெளியான பாஸ் (எ) பாஸ்கரன் படம் மார்ச் 21ம் தேதி ரீரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தற்போது பல்வேறு பழைய தமிழ்ப் படங்கள் மீண்டும் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இப்பட்டியலில் புதிதாக இணைந்துள்ளது பாஸ் (எ) பாஸ்கரன். கடந்த 2010ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், அதன் காமெடி காட்சிகளால் இப்போதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மார்ச் 21ஆம் தேதி பாஸ் (எ) பாஸ்கரன் ரீரிலீஸ் ஆகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் பாஸ் (எ) பாஸ்கரன். வாசன் விசுவல் மற்றும் தி ஷோ பீப்புள் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தினை தயாரித்தன.
மேலும், இப்படத்தினை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டது. அதேநேரம், இந்த அறிவிப்புக்குப் பிறகு ரசிகர்கள் மத்தியில் மற்றுமொரு குரல் எழுந்துள்ளது. அதாவது, இதே கூட்டணியில் உருவான சிவா மனசுல சக்தி படமும் ரிரிலீஸ் செய்யலாம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அதேபோல், சிவா மனசுல சக்தி படத்தின் 2ம் பாகம் விரைவில் உருவாகும் என சமீபத்தில் இயக்குநர் எம்.ராஜேஷ் ஒரு பேட்டியில் கூறியிருந்தது ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் ஹைப்பை உண்டாக்கி இருந்தது. ஏனென்றால், விண்டேஜ் சந்தானம் – ஜீவாவின் கலக்கல் காம்போ ரசிகர்களால் பெருமளவு கொண்டாடப்பட்டது.
இதையும் படிங்க: விடிந்தால் கல்யாணம்.. மாயமான மணமகன் வீட்டார் : காவல்நிலையத்தில் காத்திருந்த ஷாக்!
முன்னதாக, விஜய் – த்ரிஷா காம்போவில் உருவாகி மெகாஹிட்டான கில்லி படம் ரீரிலீஸ் ஆகி 20 கோடிக்கு மேல் வசூல் செய்தது மட்டுமல்லாமல், தியேட்டர்களில் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை மீண்டும் அதே ரசனையுடன் கொண்டாடியது இப்படத்தை மீண்டும் ஹிட் ஆக்கியது. இந்த நம்பிக்கையில் அடுத்தடுத்து படங்கள் ரிரிலீஸ் ஆகின்றன.

7 months ago
73









English (US) ·