ARTICLE AD BOX
ரெட்ரோ vs டூரிஸ்ட் ஃபேமிலி
கடந்த மே மாதம் 1 ஆம் தேதி சூர்யாவின் “ரெட்ரோ” திரைப்படமும் சசிகுமாரின் “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படமும் ஒரே நாளில் வெளியானது. இதில் “ரெட்ரோ” திரைப்படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை அத்திரைப்படம் பூர்த்தி செய்யவில்லை. ஆனால் “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் நாட்கள் செல்ல செல்ல மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.
“ரெட்ரோ” திரைப்படத்தின் காட்சிகள் குறைக்கப்பட்டு “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படத்திற்கான காட்சிகள் அதிகரிக்கப்பட்டன. வார நாட்களில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக “டூரிஸ்ட் ஃபேமிலி” அதகளம் செய்தது. அதுமட்டுமல்லாது இத்திரைப்படம் மிகச் சிறந்த ஃபீல் குட் திரைப்படமாகவும் ரசிகர்கள் மனதில் நிலைத்து நின்றது.
ரெட்ரோவை தூக்கி சாப்பிட்ட டூரிஸ்ட் ஃபேமிலி
விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்த “படைத் தலைவன்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் ஏ.ஆர்.முருகதாஸ், சசிகுமார், கஸ்தூரி ராஜா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதில் பேசிய தமிழக திரையரங்கு உரிமையாளர் சங்க செயலாளர் ஸ்ரீதர், “சசிகுமார் சம்பளத்தை ஏற்ற மாட்டேன் என கூறியது தயாரிப்பாளர் சார்பாக திரையரங்கு உரிமையாளர்களாகிய நாங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறோம். டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி. இந்த 5 மாதங்களில் வசூல் ரீதியாக பார்க்கும்போது குடும்பத்தினர் குழந்தைகளுடன் கூட்டம் கூட்டமாக வந்து படம் பார்க்கின்றனர். ரெட்ரோ திரைப்படத்தின் ஒட்டுமொத்த வசூலையும் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ஓவர் டேக் செய்துவிட்டது. நான் வெளிப்படையாகவே இதை கூறுகிறேன்.” என கூறினார். இவர் பேசியது சூர்யா ரசிகர்கள் பலரையும் கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.

5 months ago
75









English (US) ·