ARTICLE AD BOX
ரவி மோகன், தனது மனைவியை பிரிவதாக அறிவித்தார். இது தொடர்பாக விவாகரத்து வழக்கு போய் கொண்டிருக்கும் நிலையில், கெனிஷாவுடன் ரவிக்கு ஏற்பட்ட நெருக்கம் குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர்.
மனைவி ஆர்த்தியால் மனரீதியாக பாதிப்படைந்ததாக ரவி மோகன் பரபரப்பு அறிக்கையும் வெளியிட்டார். மேலும் கெனிஷா தனது வாழ்க்கையில் ஒளியை கொண்டு வந்தவர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படியுங்க: அப்படி கூப்பிடாதீங்க, எனக்கு பிடிக்கல- பேட்டியில் கடுப்பான ஏ.ஆர்.ரஹ்மான்? என்னவா இருக்கும்!
ஒரு ரூபாய் செலவு செய்ய வேண்டுமென்றால் ஆர்த்தியிடம் தான் கேட்க வேண்டிய நிலைமை இருந்ததாகவும், தனது சம்பளத்தை அவர் தான் நிர்வகித்து வந்ததாக பல விஷயங்கள் குறித்து ரவி கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஆர்த்திக்கு பல பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், ரவிக்கு ஒரு சிலர் ஆதரவான நிலைப்பாட்டை கூறி வருகின்றனர்.
இதனிடையே நேற்று யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் ராதாரவி, சாய் தன்ஷிகா குறித்து பேசியிருந்தார். அதில், சாய் தன்ஷிகாவை முதன்முதலில் பேராண்மை படத்தில் பார்த்தேன்.

ரெண்டு பெண்கள் சேர்ந்தாலே காலிதான். இதுல ஆறு பெண்கள் சேர்ந்து ரவியை வாட்டுவார்கள். இப்போது ரெண்டுபேர் வாட்டுகிறார்களே அது போல பயங்கரமாக வாட்டுவார்கள் என பேசினார். இவரது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.