ARTICLE AD BOX
ரேஸர் அஜித்குமார்
அஜித்குமார் தற்போது உலக நாடுகள் பலவற்றில் கார் பந்தயங்களில் மிகவும் தீவிரமாக ஈடுபாடு காட்டி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு துபாயில் நடைபெற்ற “Dubai 24H” என்ற கார் பந்தயத்தில் அஜித்குமாரின் அணி இரண்டாம் இடத்தை பிடித்தது. அதன் பின் இத்தாலியில் நடைபெற்ற “12H Mugello” என்ற கார் பந்தயத்தில் அஜித்குமாரின் அணி மூன்றாவது இடத்தை பிடித்தது. இதனை தொடர்ந்து சமீபத்தில் பெல்ஜியம் நாட்டில் நடந்த “Spa Francorchamps” பந்தயத்தில் அஜித்குமாரின் அணி இரண்டாவது இடத்தை பிடித்தது. இவ்வாறு தொடர்ந்து பல வெற்றிகளை குவித்து வருகிறது அஜித்குமாரின் அணி.
கையில் குழந்தையுடன் அஜித்குமார்
இந்த நிலையில் ரேஸர் அஜித்குமார் கையில் குழந்தையுடன் இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த குழந்தையை ரேஸ் காருக்குள் வைத்து விளையாட்டு காட்டுகிறார் அஜித்குமார். அதன் பின் மீண்டும் குழந்தையை வெளியே தூக்கிக்கொள்கிறார். இந்த கியூட் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Exclusive Video Of #AjithKumar Sir 😍💥 #AK #Ajith #Ajithkumar | #AjithKumarRacing | #24HSeries | #AKRacing | @Akracingoffl | pic.twitter.com/aUxO40cOYj
— AJITHKUMAR TEAM ONLINE (@AkTeamOnline) July 5, 2025