ARTICLE AD BOX
அல்லு அர்ஜூன் x அட்லீ பிராஜெக்ட்
தமிழ் சினிமாவின் டாப் இயக்குனராக வலம் வந்த அட்லீ, ஷாருக்கானை வைத்து “ஜவான்” திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்தார். தற்போது அல்லு அர்ஜூனை வைத்து ஒரு பிரம்மாண்ட திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இத்திரைப்படத்தில் VFX காட்சிகள் அதிகளவில் படமாக்கப்பட உள்ளதால் VFX காட்சிகளுக்கான பணிகள் அமெரிக்காவில் நடைபெறுகின்றன. இத்திரைப்படம் ஒரு சூப்பர் ஹீரோ திரைப்படம் என கூறப்படுகிறது.

மனைவியுடன் ரொமான்ஸ்
இவ்வாறு இத்திரைப்படத்தின் பணிகளில் அட்லீ பிசியாக இருந்தாலும் ஒரு பக்கம் தனது மனைவி பிரியாவுடன் ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார். அந்த வகையில் தனது மனைவியுடன் ரொமான்டிக் டிரிப் சென்றுள்ள அட்லீ வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் சாய் அப்யங்கரின் “Dude” பாடல் பின்னணியில் ஒலிக்கிறது. அட்லீ, அல்லு அர்ஜூனை வைத்து இயக்கும் படத்தின் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வீடியோ இதோ…
