ARTICLE AD BOX
அட்டர் பிளாப்
பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும் இதில் சத்யராஜ், காஜல் அகர்வால், சர்மான் ஜோஷி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

இத்திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம் தேதி வெளிவந்தது. ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் இந்நாள் வரை ரூ.175 கோடிகளையே வசூல் செய்துள்ளது. இதனால் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு இது மிகப்பெரிய நஷ்டத்தை கொடுத்த திரைப்படமாக அமைந்துள்ளது. இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரான தனஞ்சயன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டபோது சல்மான் கான் குறித்த ஒரு அதிர்ச்சி தகவலை பகிர்ந்துகொண்டார்.
அவர் இஷ்டத்துக்குதான் வருவார்
“சல்மான் கானை வைத்து படம் இயக்குவது சுலபம் கிடையாது. நாம் நினைத்தது போல் படம் பண்ண முடியாது. அவருடைய திட்டத்தின்படிதான் நீங்கள் படம் பண்ண முடியும். அவர் நான்கு மணி நேரம்தான் நடிப்பார். அந்த நான்கு மணி நேரத்தில் அவருக்குரிய காட்சிகளை எடுக்க வேண்டும். இப்படி இருக்கும்போது ஒரு இயக்குனருக்கு எப்படிபட்ட கஷ்டம் இருக்கும் பாருங்கள்.

எனக்கு தெரிந்த ஒரு இயக்குனர் சல்மான் கானை வைத்து படம் இயக்கினார். 6 நாட்கள் கால்ஷீட் கொடுத்து மூன்று நாளைக்குத்தான் படப்பிடிப்புக்கு வந்தாராம். மீதி 3 நாட்கள் டூப் போட்டு எடுத்தார்களாம்” என்று சல்மான் குறித்து தனஞ்சயன் பகிர்ந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.