ARTICLE AD BOX
புதுக்கோட்டையில் செய்தியாளரிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கிய பிறகும் ரசிகர்களை தொண்டர்களாக மாற்றாமல் இன்னமும் ரசிகர் கூட்டமாக வைத்துள்ளார். அதன் வெளிப்பாடு தான் திருச்சியில் நடைபெற்றது.
பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை அவர்கள் ஏற்படுத்தினர்
முதலில் விஜய் தன்னுடைய ரசிகர்களை தொண்டர்களாக மாற்ற வேண்டும்.
தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கிய பிறகு பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி தான் விஜய் குறித்து பிரபலம் செய்து வருகிறது ஆனால் இதுவரை விஜய் பத்திரிகையாளர்களை சந்திக்க விஜய் மறுக்கிறார்
இந்தியாவில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம். விஜய் உட்ச நட்சத்திரமாக இருப்பதால் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது அதை மாற்று கருத்து இல்லை
விஜய் தொண்டர்களை முதலில் அரசியல் படுத்த வேண்டும் அதுதான் என்னுடைய வேண்டுகோள். அரசியலில் பண்பட்டவர்களாக பக்குவ பட்டவர்களாக அவர்களை மாற்ற வேண்டும்.
பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்து ரோட் சோ கலாச்சாரத்தை பிரபலப்படுத்தி விட்டு சென்றுள்ளார். அதன் பிறகு முதலமைச்சர் முதல் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் ரோடு சோ நடத்தி வருகின்றனர்.
முதலில் தமிழகத்தில் ரோடு சோவை தடை செய்ய வேண்டும். அதற்கு முதலமைச்சர் முன்னுதாரணமாக தடை செய்துவிட்டு அவர் ரோட் ஷோ நடத்தாமல் இருக்க வேண்டும்.
பொதுமக்கள் தான் நமது எஜமானர்கள் அவர்களுக்கு எந்த விதமான இடையூறும் செய்யக்கூடாது. முதலமைச்சர் தமிழகத்தில் ரோடு சோ தடை செய்துவிட்டு அவர் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.
பாட்டாளி மக்கள் கட்சி ஒன்றாக இருந்தால் தான் வன்னிய சமுதாயத்திற்கு உட்பட பல்வேறு சமுதாயத்திற்கு நல்லது.
சமூக நீதி கொள்கையிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி விலகி அப்பா மகன் பிரச்சனைக்காக கட்சி பலவீனம் அழிந்து வருவது இது சமூக நீதிக்கு உகந்தது அல்ல கண்டிப்பாக இருவரும் ஒன்று சேர வேண்டும்
திமுக கூட்டணியில் தற்போது வரை தமிழக வாழ்வுரிமைக் கட்சி நீடித்து வருகிறது. திமுக கூட்டணியை விட்டு பிரிய வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை.

ஒருவேளை திமுகவிற்கு மிக பெரிய கட்சிகள் கூட்டணிக்குள் புதிதாக வந்தால் அப்போது தமிழக வாழ்வுரிமைக் கட்சி திமுக கூட்டணிக்கு தேவையில்லை என்று அவர்கள் வேண்டுமானால் நினைக்கலாம். ஆனால் நான் அவ்வாறு நினைக்கவில்லை. திமுக கூட்டணியில் தான் நாங்கள் நீடிக்க விரும்புகிறோம்.
தமிழகத்தில் அனைத்து நடிகர்களுக்கும் கூட்டம் கூடும். ஒருவேளை அஜித் நிகழ்ச்சிக்கு ஒன்று வந்தால் அவருக்கும் கூட்டம் கூடும். சமீபத்தில் நயன்தாரா சேலத்திற்கு வந்தபோது இரண்டு மடங்கு கூட்டம் வந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது கூட்டத்தை வைத்து விஜய்க்கு செல்வாக்கு உள்ளது என்பதை ஏற்க முடியாது.

ஆனால் விஜய்க்கு இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளது என்பதை மறுக்க முடியாது.சினிமாவில் இருந்து அரசியல் ஒருவர் வருவது என்பது ஏற்புடையது அல்ல இது தமிழகத்திற்கு உகந்தது அல்ல
