ரோபோ சங்கருக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை… வெளியானது மருத்துவ அறிக்கை!

2 hours ago 2
ARTICLE AD BOX

தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ரோபோ சங்கர். பின்னர் வெள்ளித்திரையில் தனது காமெடி மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

தொடர்ந்து பட வாய்ப்புகள் வர, முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்தார். இடையில் காணாமல் போன அவர், உடல் மெலிந்து பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்றது பேசு பொருளானது.

பின்னர் தான் அவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தது தெரியவந்தது. தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், தனது மகளான இந்திரஜாவுக்கு கோலாகலமாக திருமணம் நடத்தினார்

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர், படப்பிடிப்பின் போது நேற்று மயங்கி விழுந்ததாக கூறப்பட்டது. நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக அவர் மயங்கியதாக கூறப்பட்டது.

அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையல், மருத்துவமனையில் சாதாரண பிரிவில் அனுமதிக்கப்ப்டடார். ஆனால் நேற்று மாலையே அவர் உடல்நிலை மோசமானது.

Robo Shankar is in ICU… Medical report released!

உடனே அவர் ஐசியூவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடாந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். மஞ்சள் காமாலைக்கு பிறகு மீண்டும் உடல்நலக்குறைவால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்டடுள்ளது குடும்பத்தினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

  • Robo Shankar is in ICU… Medical report released! ரோபோ சங்கருக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை… வெளியானது மருத்துவ அறிக்கை!
  • Continue Reading

    Read Entire Article