ARTICLE AD BOX
கோவையில் படிக்கும் 15 வயது சிறுவன் லிஃப்ட் கேட்டதில் நான்கு போத இளைஞர்கள் அழைத்து சென்று குடிக்க சொல்லி துன்புறுத்தையும் சிறுவனை கொடூரமாக தாக்கிய சம்பவம் கோவையில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படியுங்க: காருக்குள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிரபல ரவுடி.. 3 வருடமாக ஸ்கெட்ச் போட் கூட்டாளிகள்!!
தன்னுடைய மகன் சொக்கம்பாளையம் பிரிவு காந்தி அரசு பள்ளியில் படித்து வருவதாகவும், இன்று காலை பள்ளிக்கு செல்ல பிடிக்கவில்லை என்று சிறுவன் சரியாக 9:00 மணி அளவில் தனது ஸ்கூல் பேக்கை மாட்டிக் கொண்டு ஹாஸ்டலில் இருந்து வெளியேறி இருக்கிறார்.
இதில் சாலையில் செல்லக் கூடிய இளைஞர்களிடம் சிறுவன் லிப்ட் கேட்டு இருக்கிறார்.அப்பொழுது சிறுவனை அழைத்து சென்ற நான்கு மர்ம நபர்கள் அவரை குடிக்க சொல்லி துன்புறுத்தியதாகவும், ஒரு தனியார் அறைக்கு சென்று கழிவறையிலும் அவரை லீபர் மற்றும் கற்களால் கொடூரமாக சிறுவனை தாக்கி இருக்கின்றனர்.
தலை மற்றும் முதுகு என மாணவனின் முகம் என அனைத்து பகுதிகளிலும் போதை ஆசாமிகள் கொடூரமாக தாக்கி உள்ளதாக கோவை அரசு மருத்துவமனையில் இருந்து அவரது தாய் கண்ணீர் மல்க கூறி உள்ளார்.
முதலில் அரசு பள்ளி படிக்கக் கூடிய மாணவன் யாருக்கும் தெரியாமல் விடுதியில் இருந்து வெளியேறியது எப்படி ??? லிஃப்ட் கொடுத்த அந்த போதை ஆசாமிகள் யார்??? கொடூரமாக தாக்கிய இடத்திற்கு சென்ற காவல் துறையினர் விசாரணை துவக்கி உள்ளனர்.அங்கு இருக்கக் கூடிய சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.