ARTICLE AD BOX
புழல் சிறையில் லெஸ்பியன் அட்டகாசம் அதிகரித்துள்ளதாகவும், வெளிநாட்டு கைதி மோனிகாதான் காரணம் என பெண் காவலர் குற்றம்சாட்டியுள்ளார்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நைஜீரியா நாட்டு பெண் கைதி மோனிகா, அங்கு கணியில் இருந்து பெண் காவலர் சரஸ்வதியை தாக்கியுள்ளார்.
இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிறையில் நடந்தது குறித்து பேசியது, பரபரப்பை கிளப்பியுள்ளது.
புழல் சிறையில் வெளிநாட்டு கைதிகளால் காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறிய சரஸ்வதி, தப்பு செய்து விட்டு சிறையில் கைதிகள் சுதந்திரமாக இருப்பதாகவும், வேலை செய்பவர்கள் சிறையில் உள்ளது போல இருப்பதாக கூறியுள்ளார்.
சிறைத்துறை தலைவர் தான் இதற்கு காரணம் என கூறிய அவர், வெளிநாட்டு கைதிக்கு முழு சுதந்திரம் கொடுத்தது அவர் தான் என குற்றம்சாட்டினார்.
இதையும் படியுங்க: முட்புதரில் கல்லூரி மாணவன் சடலம்… தேசிய நெடுஞ்சாலை அருகே ஷாக்.. 24 மணி நேரமாக நடந்த பயங்கரம்!
மேலும் வெளிநாட்டு உணவுகளை சாப்பிடும் வெளிநாட்டு கைதிகள், உள்ளூர் உணவுகளையும் சாப்பிடுகின்றனர், சிறைக்குள் தனியாக ப்யூட்டி பார்லர் வைத்து கொள்கின்றனர்.
தனியாக கூடாரம் அமைத்து சேலையில் மெத்தைகள் போல அமைத்து ஜம்மென்று படுத்துக்கொள்கின்றனர். இரவில் நிர்வாணமாக கட்டிப்பிடித்து தூங்குகின்றனர், நிர்வாணமாக இரவு நேரத்தில் வெளியில் சுத்துகின்றனர்.
வெளிநாட்டு கைதிகளை பார்த்து தமிழ்நாட்டு பெண் கைதிகளும் கெட்டு போகின்றனர். அவர்களிடம் கேள்வி கேட்டால், வெளிநாட்டு கைதிகளை ஒன்றுமே கேட்பதில்லை, எங்களை மட்டும் ஏன் கேட்கிறீர்கள் என கேட்பதாக கூறினார்.
இந்த பிரச்னைக்கு காரணம் நைஜீரியா நாட்டை சேர்ந்த கைதி மோனிகா தான், அவரை கண்டித்தால் உன்னால் என்ன பண்ண முடியும், 2 வாய்தா போடுவீங்க, அதுக்கு ஆஜராகணும், அவ்வளவுதானே என அசால்ட்டாக சொல்கிறார்.

கைதி மோனிகா தாக்கப்பட்டு இதுவரை 4 பெண் கவாலர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு பெண் காவலர் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் வேலையே வேண்டாம் என எழுதி கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.
இந்த பிரச்சனையை தீர்க்க, வெளிநாட்டு கைதிகளை தனி சிறையில் வைத்து பராமரிக்க வேண்டும், சிறைத்துறை தலைவர் மகேஸ்வர் தயாள் ஆதரவு கொடுப்பதை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
