லேடி சூப்பர் ஸ்டார் வேண்டாம்.. நயன்தாரா அறிவிப்புக்கு காரணம் என்ன?

1 week ago 6
ARTICLE AD BOX

தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் என்று நடிகை நயன்தாரா அஜித் குமார் பாணியில் அறிவித்துள்ளார்.

சென்னை: இது தொடர்பாக நடிகை நயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் ஒரு நடிகையாக பயணித்து வரும் இந்தப் பாதையில் மகிழ்ச்சி மற்றும் வெற்றியின் அனைத்துக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். இந்தக் கடிதம் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினரும் ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருப்பீர்கள் என்பதற்கான என் உள்ளார்ந்த ஆசையாக இருக்கட்டும்.

என் வாழ்க்கை எப்போதும் ஒரு திறந்த புத்தகமாகவே இருந்திருக்கிறது. உங்கள் எல்லையற்ற அன்பும், ஆதரவும்தான் அதற்கு அழகு சேர்த்துள்ளது. என் வெற்றியின்போது என்னைத் தோளில் சாய்த்து பாராட்டியதோடு, கடினமான தருணங்களில் என்னைத் தூக்கி நிறுத்தவும் நீங்கள் எப்போதும் இருந்தீர்கள்.

நீங்கள் பலரும் என்னை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அன்போடு அழைத்து வாழ்த்தி உள்ளீர்கள். உங்கள் பேராதரவால் உருவான இந்தப் பட்டத்திற்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், இனிமேல் என்னை ‘நயன்தாரா’ என்று அழைக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

Nayanthara calls off Lady Super Star

ஏனென்றால், என் பெயர்தான் எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. அது என்னை மட்டுமே குறிக்கிறது. ஒரு நடிகையாக மட்டுமல்ல, தனிநபராகவும். பட்டங்களும் விருதுகளும் மதிப்புமிக்கவைதான். ஆனால், சில நேரங்களில் அவை நம்மை நம் வேலையிலிருந்து, நம் கலைத் தொழிலிலிருந்து, உங்கள் அன்பான தொடர்பிலிருந்தும் பிரிக்கக்கூடும்.

நாம் அனைவரும் பகிர்ந்துகொள்ளும் அன்பின் மொழி, நம்மை எல்லா எல்லைகளையும் கடந்து இணைத்திருக்கிறது. எதிர்காலம் எதைக் கொண்டு வந்தாலும், உங்கள் ஆதரவு என்றும் மாறாது என்பதை தெரிந்துகொள்வதில் எனக்கு பேரானந்தம். அதேநேரம், உங்கள் அனைவரையும் மகிழ்விக்க என் கடின உழைப்பு தொடர்ந்து இருக்கும்.

இதையும் படிங்க: பிரபல நடிகரின் மனைவியை உருகி உருகி காதலித்த ரகுவரன் : வெறுத்துப் போய் குடிக்கு அடிமையான அவலம்!

யார் இந்த நயன்தாரா? சினிமா தான் நம்மை ஒன்றாக இணைக்கிறது. அதை நாமெல்லோரும் சேர்ந்து கொண்டாடிக் கொண்டே போகலாம்” எனத் தெரிவித்துள்ளார். சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாரா, விஜய், அஜித் குமார், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களோடு நடித்து உச்ச நடிகையானார்

இருப்பினும், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் அடுத்தடுத்து நடித்து வந்தபோது ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டார். ஏற்கனவே, தமிழ்த் திரையுலகில் அஜித்குமார் தன்னை அல்டிமேட் ஸ்டார், தல என்றெல்லாம் அழைக்க வேண்டாம் எனவும் அஜித்குமார் என்று குறிப்பிட்டாலே போதும் என அறிவித்திருந்தார்.

  • Nayanthara calls off Lady Super Star லேடி சூப்பர் ஸ்டார் வேண்டாம்.. நயன்தாரா அறிவிப்புக்கு காரணம் என்ன?
  • Continue Reading

    Read Entire Article