ARTICLE AD BOX
நடிகர் சூர்யாவின் கடைசி ஹிட் படம் எது என்று கேட்டால் உடனே ஜெய்பீம் படத்தை கூறுவோம். ஆனாலும் அதில் அவருக்கு முக்கிய ரோல் மட்டுமே.. படம் முழுவதும் வரமாட்டார். மணிகண்டனின் நடிப்புதான் பேசப்பட்டது.
சூரரைப் போற்று மிகப்பெரிய ஹிட் கொடுத்தாலும், அது ஓடிடியில் வெளியானது என்பதால் தியேட்டர் ஹிட் என்று கடைசியில் ரியதாக எந்த படமும் இல்லை.
சமீபத்தில வெளியான கங்குவா படத்திற்கு கொடுத்த ஹைப் காரணமோ என்னமோ படம் நன்றாக இருந்தும் தமிழ் ரசிகர்கள் ரசிக்கவில்லை. ரெட்ரோ ஓரளவு சூர்யாவை காப்பாற்றியது.
இப்படிப்பட்ட சூழலில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிக்க கமிட் ஆனார் சூர்யா. கருப்பு என பெயரிடப்பட்ட இந்த படத்தில் திரிஷா, சிவாதா, சுவாஸிகா, நட்டி, யோகி பாபு என நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
ஆர்ஜே பாலாஜி படம் என்பதால் எதிர்ப்பார்ப்புக்க பஞ்சமில்லை. இந்த சூழலில் இன்று வெளியானது கருப்பு படத்தின் டீசர். சூர்யாவின் தோற்றம் பிரம்மிக்க வைத்துள்ளது. வக்கீலாக, மெர்சல் படத்தில் வரும் விஜய்யை போல ஒரு கதாபாத்திரம் என கமர்ஷியலாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

சாய் அபயங்கரின் பின்னணி இசை, மாஸ் காட்டியுள்ளது. சூர்யாவின் ரசிகர்களுக்கு இந்த படம் செம ட்ரீட்டாக அமைய போவது என்பது உறுதி. மற்ற ரசிகர்களையும் ஆர்ஜே பாலாஜி மிஸ் செய்ய மாட்டார் என்பதையும் உறுதியாக சொல்லலாம். நிச்சயம் கருப்பு சூர்யாவுக்கு கம்பேக் கொடுக்கம் என்றே நம்பலாம்.
