ARTICLE AD BOX
அனைத்து தரப்பினரையும் கவர்ந்த இயக்குனர்
சிறியவர் முதல் பெரியவர் வரை இப்போது உச்சரித்துக்கொண்டிருக்கும் பெயர் லோகேஷ் கனகராஜ் என்ற பெயராகத்தான் இருக்கும். “மாநகரம்”, “கைதி”, “மாஸ்டர்” போன்ற திரைப்படங்களின் மூலம் அதிகளவு ரசிகர்களை தன் பக்கம் இழுத்த லோகேஷ் கனகராஜ், “விக்ரம்” திரைப்படத்தின் மூலம் LCU என்ற ஒரு புது யுனிவர்ஸையே உருவாக்கினார். அதனை தொடர்ந்து “லியோ” என்ற வெற்றித் திரைப்படத்தை கொடுத்த அவர், தற்போது ரஜினிகாந்தை வைத்து “கூலி” திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இவ்வாறு குறுகிய காலத்திலேயே இந்தியாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக வலம் வரத்தொடங்கிவிட்டார் லோகேஷ். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் ஒரு குழந்தையை கொஞ்சிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
லோகி மாமா
ஒரு திரையரங்கில் லோகேஷ் கனகராஜை ஒரு குழந்தை “லோகி மாமா” என்று அன்போடு கத்தி கூப்பிட, அந்த குழந்தையை பார்த்ததும் புன்முறுவலுடன் அருகில் சென்ற லோகேஷ் கனகராஜ் அந்த குழந்தையின் கன்னத்தை பிடித்து “லவ் யூ டூ” என கொஞ்சினார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
— AmuthaBharathi (@CinemaWithAB) July 29, 2025லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படத்தின் டிரெயிலர் வருகிற ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
