ARTICLE AD BOX
லோகேஷ் பட ஹீரோ
லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின் Post Production பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இத்திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகளில் மிகத் தீவிரமாக பணியாற்றி வருகிறார் இயக்குனர்.

லோகேஷ் கனகராஜ் தற்போது பல டாப் நடிகர்களின் படங்களை இயக்கி வருகிறார். எனினும் அவர் முதலில் இயக்கிய “மாநகரம்” திரைப்படம் மிகவும் சின்ன பட்ஜெட் திரைப்படமாகும். இதில் நடிகர் ஸ்ரீ கதாநாயகர்களில் ஒருவராக நடித்திருந்தார். இந்த நிலையில் நடிகர் ஸ்ரீ தற்போது சினிமாத்துறையையே விட்டு ஒதுங்கி வாழ்ந்து வருகிறார். மேலும் அவரது மனநிலை சரியில்லை என்று அவரது வீடியோக்களின் மூலம் தெரிய வருகிறது. அவர் மன அழுத்ததிற்காக மாத்திரைகள் எடுத்து வந்தார் எனவும் அவரது தோழி ஒருவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
தொடர்ந்து பறந்த ஃபோன் கால்…

ஸ்ரீயின் தோழர்கள் பலரும் அவரை தொடர்புகொள்ள முயன்று வருகிறார்கள். ஆனால் அவர் யார் அழைத்தாலும் பதிலளிக்க மறுக்கிறாராம். அவர் எங்கிருக்கிறார் என பலரும் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் “கூலி” திரைப்படத்தின் பிசியான பணிகளுக்கு இடையிலும் ஸ்ரீயின் தொலைப்பேசி எண்ணிற்கு பல முறை ஃபோன் செய்தாராம். ஆனால் ஸ்ரீ பதிலளிக்கவே இல்லையாம். இடைவிடாது பணிகளுக்கு மத்தியில் ஸ்ரீயை எப்படியாவது தொடர்புகொள்ள வேண்டும் என லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.