ARTICLE AD BOX
பாலிவுட்டின் டாப் நடிகர்
பாலிவுட் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் சஞ்சய் தத். இவர் 1980களில் இருந்து பாலிவுட்டில் நடித்து வருகிறார். பல்வேறு பாலிவுட் திரைப்படங்களில் நடித்து டாப் நடிகராக வலம் வந்த இவர் சமீப காலமாக பாலிவுட் மட்டுமல்லாது பல்வேறு மொழிகளிலும் நடித்து வருகிறார்.
அந்த வகையில் “கேஜிஎஃப் 2” திரைப்படத்தில் அதீரா என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்து பார்வையாளர்களை அசர வைத்தார். அதனை தொடர்ந்து தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யின் “லியோ” திரைப்படத்தில் நடித்திருந்தார். இவரது கதாபாத்திரத்தை பார்வையாளர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் ஒரு சிறிய கதாபாத்திரத்திலேயே இவர் நடித்திருந்தார்.
லோகேஷ் மீது கோபம்!
சஞ்சய் தத் தற்போது கன்னடத்தில் “கே டி தி டெவில்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சஞ்சய் தத், “லோகேஷ் கனகராஜ் மீது கோபமாக இருக்கிறேன். ஏனென்றால் “லியோ” திரைப்படத்தில் எனக்கு பெரிய கதாபாத்திரம் தரவில்லை. அவர் என்னை வீணாக்கிவிட்டார்” என சிரித்துக்கொண்டே ஜாலியாக கூறினார். இவரது பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.