லோகேஷ் கனகராஜ்ஜின் உருட்டுக்கள்? ரவுண்டு கட்டி வெளுக்கும் நெட்டிசன்ஸ்! அடி ரொம்ப ஓவரோ…

17 hours ago 3
ARTICLE AD BOX

ரசிகர்களை ஏமாற்றிய கூலி?

லோகேஷ்  கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியான “கூலி” திரைப்படம் ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லை. இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்பு இத்திரைப்படம் குறித்து ரசிகர்களின் மத்தியில் பல எதிர்பார்ப்புகள் இருந்தன. இத்திரைப்படத்தில் கைக்கடிகாரம் பிரதானமான ஒன்றாக  காட்டப்பட்டது. அந்த வகையில் இத்திரைப்படம் டைம் டிராவல் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 

அது மட்டுமல்லாது லோகேஷ் கனகராஜ்ஜின் திரைப்படம் நிச்சயம் வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசியில் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அது மட்டுமல்லாது படம்  வெளியாவதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் அளித்த பேட்டிகள் இணையத்தில் வைரலானது.

“நான் 1000 கோடிக்கு கியாரண்டி கொடுக்க முடியாது. ஆனால் ஒரு நபர் கொடுக்கும் 150 ரூபாய் டிக்கெட்டுக்கு கியாரண்டி கொடுக்க முடியும். மக்களை திருப்திபடுத்துவதுதான் முக்கியம்” என கூறினார். அதுமட்டுமல்லாது ஆமிர்கான் கதாபாத்திரம் படம் முழுவதும் வரும் என கூறியிருந்தார். உபேந்திராவின் கதாபாத்திரம் முக்கிய கதாபாத்திரம் எனவும் கூறியிருந்தார். 

அதிர்ச்சியை கிளப்பிய லோகியின் பேட்டி

ஆனால் “கூலி” படத்தில் ஆமிர்கான் கிளைமேக்ஸில் மட்டும் தோன்றினார். அதுமட்டுமல்லாது உபேந்திராவின் கதாபாத்திரம் மிக சிறிய கதாபாத்திரமே. இந்த நிலையில் படம் வெளியானதற்கு பின் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “கூலி படத்தில் டைம் டிராவல் இருக்கும் என்று நான் கூறவில்லை. LCU என்றும் கூறவில்லை. ஆனால் இதெல்லாம் அவர்களே அப்படி நினைத்துக்கொண்டார்கள். மக்களின் எதிர்பார்ப்பிற்கு என்னால் கதை எழுதமுடியாது. நான் எடுக்கும் படம் அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தால் நல்ல விஷயம்” என கூறினார். 

ட்ரோலில் இறங்கிய நெட்டிசன்ஸ்

லோகேஷ் கனகராஜ்ஜின் இப்பேட்டி இணையத்தில் வைரல் ஆன நிலையில் லோகேஷ் கனகராஜ்ஜை பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். படம் வெளியாவதற்கு முன்பு வேறு மாதிரி உருட்டினார், இப்போ வேற மாதிரி உருட்டுறார் என கேலி செய்து வருகின்றனர். 

“கைக்கடிகாரத்தை காட்டியதால் டைம் டிராவல் என்று நாங்கள் நினைத்தது தவறுதான். ஆனால் லோகேஷ் கனகராஜ் அந்த கைக்கடிகாரத்தை மையமாக வைத்தே டிரெயிலரை வடிவமைத்திருந்தார்” எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

  • Netizens troll Lokesh kanagaraj recent interview about coolieலோகேஷ் கனகராஜ்ஜின் உருட்டுக்கள்? ரவுண்டு கட்டி வெளுக்கும் நெட்டிசன்ஸ்! அடி ரொம்ப ஓவரோ…
  • Continue Reading

    Read Entire Article