ARTICLE AD BOX
ஆபாச நடிகையை பின்பற்றிய விவகாரம்–விளக்கம் கொடுப்பாரா?
மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் பந்துவீச்சாளரான விக்னேஷ் புத்தூர்,2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக,தன்னுடைய முதல் போட்டியிலே 3 விக்கெட்களை எடுத்து அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இந்நிலையில்,ரசிகர்கள் யார் இந்த விக்னேஷ் புத்தூர் என்று தேடியபோது,அவரது ட்விட்டர் கணக்கில் வெளிநாட்டு ஆபாச நடிகை ஒருவரை பின்பற்றியுள்ள விவரத்தை கண்டுபிடித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்க: பந்து வீசும் போது டேம்பரிங் செய்ததா CSK? வைரலாகும் வீடியோவால் சர்ச்சை!
இவர் தன்னுடைய X கணக்கில் எந்த வித பதிவும் இதுவரை பதிவிடவில்லை,23 வயதே ஆன இவர் இதை வேண்டுமென்றே செய்தாரா,இல்லையா என்பது குறித்து சமூக வலைத்தளத்தில் விவாதித்து வருகின்றனர்.
மேலும்,அவரது கணக்கில் ஹாலிவுட்,பாலிவுட் நடிகைகள் மற்றும் ஆர்சிபி அணியையும் பின்பற்றியுள்ளார்.இதை வைத்து சிலர் “ஆர்சிபி ரசிகரா?” என கிண்டல் செய்துள்ளனர்.
இது தேவையற்ற சர்ச்சையாக இருந்தாலும்,அவரது திறமையான பந்துவீச்சு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரும் பலமாக அமைந்தது மட்டுமில்லாமல்,எதிர்காலத்தில் இந்திய அணியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

7 months ago
66









English (US) ·