ARTICLE AD BOX
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர் நடித்திருந்த இப்படத்திற்கு இசை லியோன் ஜேம்ஸ் அமைத்திருந்தனர்.
இதையும் படியுங்க: வாரிசு நடிகருடன் கூத்து… கருவை சுமந்த நடிகை : காத்திருந்த டுவிஸ்ட்!
படம் வெளியான முதல் நாளே மாஸான வரவேற்பை பெற்றது. குறிப்பாக வார இறுதிநாட்களை விட வார நாட்கள் கூட்டம் அலைமோதியது. படம் வெளியான 15 நாட்களில் 137 கோடி வசூலித்து பிரம்மாண்டம் காட்டியுள்ளது.
அண்மையில் வெளியாகியிருந்த அஜித் நடித்த விடாமுயற்சி படத்தை வசூலில் தூக்கி சாப்பிட்டது டிராகன். அதே போல டிராகன் படத்துடன் வெளியான தனுஷின் நிலவுக்கு என் மீது என்னடி கோபம் படம் வந்த வேகத்திலேயே திரும்பியது.
இப்படி அசுர வேட்டை நடத்தி வரும் டிராகன் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. இது குறித்து வெளியான தகவலில், நெட்பிளிக்ஸ் தளத்தில் வரும் 21ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.