ARTICLE AD BOX
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த போது செய்தியாளரிடம் பேசுகையில், மத்திய அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது தவறு கண்டிக்கத்தக்கது.
60 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையை நாம் அமல்படுத்திருக்கிறோம். இந்த புதிய கல்விக் கொள்கை என்பது 2020இல் அறிவித்தார்கள். ஐந்தாண்டுகள் கழித்து மும்மொழி கொள்கையை திணிப்பது எந்த விதத்தில் நியாயம்.
இதையும் படியுங்க : தவெக நிர்வாகிகள் நியமனத்தில் சிக்கல்? கூடுதலாகிறதா கட்சி மாவட்டங்கள்?
21, 22, 23, 24 ஆகிய ஆண்டுகளில் எல்லாம் சொல்லாமல் 2025 தொடக்கத்தில் மும்மொழி திட்டத்தை அமல்படுத்தாததால் தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய கல்வி நிதியை தர மாட்டோம் என்று கூறுவது எல்லாம் அரசியல் நோக்கத்தில்தான் இதை வற்புறுத்துகிறார்கள். நம்மைப் பொறுத்தவரை இரு மொழி கொள்கைதான்.
வடநாட்டில் ஒரு மொழிக் கொள்கைதான் என்று நான் குற்றம் சாட்டுகின்றேன். வடமாநிலங்களில் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறேன். மக்களை சந்தித்துள்ளேன் அவர்களுக்கு ஒரு மொழி தான் தெரியும்.
பேச்சு மொழி இந்தி அரசு மொழி, இந்தி பயிற்சி மொழி, இந்தி பாட மொழி, இந்தி ஆங்கில ஆசிரியர்களே அரசு பள்ளிகளில் நியமிப்பது கிடையாது. ஆங்கிலமே சொல்லிக் கொடுக்கவில்லை.
இரண்டாவது மொழி ஆங்கிலம் என்று புதிய கல்விக் கொள்கை சொல்கிறது. ஆனால் வடமாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆங்கில ஆசிரியர்களே நியமிக்கவில்லை. தமிழ் ஆசிரியர்கள் தெலுங்கு ஆசிரியர்கள் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது.
அவர்கள் முன்மொழிக் கொள்கையை அமல் செய்கிறார்களா? என்னைப் பொருத்தவரை நான் பார்த்தவரை இந்தியாவில் எந்த மாநிலத்திலும் மும்மொழிக் கொள்கை செயல்படவில்லை.
அப்படி இருக்கும்போது தமிழ்நாட்டை மட்டும் குற்றம் சாட்டி மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தாததால் நிதி தரமாட்டோம் என்று கூறுவது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் 52 கேந்திர வித்யாலயா பள்ளிகள் உள்ளது. அதனை நடத்துவது மத்திய அரசு முழு செலவும் முழு நிர்வாகமும் மத்திய அரசுதான்.
பயிற்சி மொழி ஆங்கிலம் தான் இரண்டாவது மொழி ஹிந்தி அல்லது சமஸ்கிருதம் மூன்றாவது மொழி என்பது அங்கு சொல்லிக் கொடுக்கவே இல்லை. 52 பள்ளிகளிலும் தமிழையே கற்றுக் கொடுக்கவில்லை.
இவர்கள் எந்த முகத்தோடு வந்து தமிழ்நாடு மக்களை பார்த்து தமிழ்நாடு அரசை பார்த்து நீங்கள் மும்மொழி திட்டத்தை நிறைவேற்ற வில்லை அதனால் நிதி வழங்கவில்லை என்று எந்த முகத்தோடு சொல்கிறார்கள்.இவர்களின் 52 பள்ளிகளிலேயே மும்மொழி கொள்கை இல்லை. அதனால் இது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் இந்த பிரச்சனையில் பாஜகவை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் ஒரு அணியில் நிற்கிறார்கள். இரு மொழிக் கொள்கையை தான் நாங்கள் அமல்படுத்துவோம் என்று உறுதியாக இருப்பதை நான் வரவேற்கின்றேன். தமிழ்நாடு அரசுக்கு தமிழ்நாடு நலனை விரும்புகின்ற அரசியல் கட்சிகள் துணையாக இருக்க வேண்டும்.
அரசியல் சாசன சட்டத்தில் இந்தி மொழி ஆட்சி மொழி என்று இருக்கிறது. அதோடு ஆங்கிலமும் கூடுதல் ஆட்சி மொழியாக இருக்கும் என்று உறுதியை தந்தது காங்கிரஸ் பிரதமர் ஜவர்கலால் நேரு. 1965ல் மொழி போராட்டம் நடந்த போது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி டெல்லியிலிருந்து சென்னைக்கு சென்று எனது தந்தை தந்த உறுதிமொழியை நானும் தருகிறேன் என்று கூறினார்.
தொடர்ந்து இருந்த காங்கிரஸ் பிரதமர்கள் ஹிந்தி ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகள் ஆட்சி மொழி.. பாடமொழி பயிற்சி மொழி எல்லாம் பிரச்சனை கிடையாது. ஆட்சி மொழி தான் பிரச்சனை. ஆட்சி மொழி அது இன்று வரை இருக்கிறது இந்தியும் ஆங்கிலமும் தான். அது இன்றுவரையும் இருக்கத்தான் செய்கிறது இதில் காங்கிரசை குற்றம் சுமத்தி என்ன செய்வது என பேசினார்.