ARTICLE AD BOX
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த குஷால் பிஷ்வாஸ், அலிகாதர் ஷேக் மதுக்கரையிலும், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சிவக்குமார், குன்னூரிலும் வேலை செய்தனர்.
இவர்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டு கோவை வந்தனர். பின்னர் அவர்கள் காந்திபுரம் பேருந்து நிலையம் செல்ல கோவை ரயில் நிலையத்தில் ஆட்டோவை வாடகைக்கு எடுத்தனர்.
இதையும் படியுங்க: ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவை தொடர்ந்து சிக்கும் 3 எழுத்து நடிகர்.. இவரா அந்த பிரபலம்..?
ஆனால் அவர்கள் பேருந்து நிலையத்துக்கு அழைத்துச் செல்லாமல், ஆவாரம்பாளையம் மேம்பாலம் பகுதிக்கு அழைத்துச் சென்று மிரட்டி மூன்று பேர் பணம் பறித்தனர்.
இது குறித்து ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து ஆட்டோ ஓட்டுநர்களான உக்கடத்தைச் சேர்ந்த முகமது அசாருதீன், தென்னம்பாளையத்தைச் சேர்ந்த நவுபால் பாஷா செல்வத்தைச் சேர்ந்த செந்தில்குமார் ஆகிய மூன்று பேரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
விசாரணையில் அவர்கள் மூன்று பேரும் வட மாநிலத்தைச் சேர்ந்த பலரை கடத்திச் சென்று பணம் பறித்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவர்கள் மீது புகார்களும் குவிந்து வருகின்றன.
இது குறித்து காவல்துறையை அதிகாரிகள் கூறும் போது, பணம் பறிப்பு வழக்கில் கைதான முகமத் அசாருதீன், நவுபால் பாஷா, செந்தில்குமார் ஆகியோர் கடந்த 14 ஆம் தேதி வடமாநிலத்தில் இருந்து வந்த மேலும் நான்கு பேரை வாலாங்குளத்தில் கடத்திச் சென்று 15,000 பறித்து உள்ளனர் அந்த வழக்கிலும் அவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
அவர்கள் 3 பேர் மீது புகார் குவிந்து வருகிறது. எனவே அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து உள்ளனர். இது தொடர்பாக விரைவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும், எனவே இந்த 3 பேரால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்யலாம் என்றும் காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.