வடிவேலுகிட்ட கோடி ரூபாய் கொடுத்தேன், ஆனால் அவரு? ஓபனாக போட்டுடைத்த பிரபல நடிகர்…

1 day ago 7
ARTICLE AD BOX

புகார் மீது புகார்..

சமீப காலமாகவே வடிவேலுவுடன் இணைந்து நடித்த பல நடிகர்கள் அவரை குறித்து பல புகார்களை அடுக்கி வந்தனர். அவர் படப்பிடிப்புத் தளத்தில் யாருக்கும் மரியாதை கொடுக்க மாட்டார், பலரது வாய்ப்பை தட்டி பறித்துள்ளார் என வடிவேலுவின் மீது பல குறைகளை கூறி வந்தனர். சில வருடங்களுக்கு முன்பு கூட “இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி” திரைப்படத்தின் விவகாரத்தில் வடிவேலுவுக்கு ரெட் கார்டும் கொடுக்கப்பட்டது. இந்த ரெட் கார்டால் அவர் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. 

actor rk said that he gave one crore advance to vadivelu

ஒரு கட்டத்தில் ரெட் கார்டு விலக்கப்பட்டதை தொடர்ந்து வடிவேலு பல திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். ஆனால் “மாமன்னன்” திரைப்படத்தை தவிர வேறு எந்த திரைப்படமும் ரசிகர்களை கவரவில்லை. இதனை தொடர்ந்து தற்போது “கேங்கர்ஸ்” என்ற திரைப்படத்தில் சுந்தர் சியுடன் இணைந்து வடிவேலு நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வருகிற 24 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகவுள்ளது. 

ஒரு கோடி கொடுத்தேன், ஆனால்?

“எல்லாம் அவன் செயல்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப் பிரபலமாக அறியப்பட்டவர் நடிகர் ஆர்கே. இவர் “அழகர்மலை” என்ற திரைப்படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த நிலையில் இவர் தற்போது சென்னையில் சொந்தமாக ஒரு திரைப்பட ஸ்டூடியோவை தொடங்கியுள்ளார். மேலும் அவர் தற்போது யோகி பாபு, நாசர் ஆகியோரை வைத்து ஒரு திரைப்படத்தையும் உருவாக்கி வருகிறார்.

actor rk said that he gave one crore advance to vadivelu

இந்த ஸ்டூடியோவின் தொடக்கவிழாவில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார் ஆர்கே. அப்போது ஒரு பத்திரிக்கையாளர் வடிவேலுவை உங்கள் படத்தில் நடிக்க அழைத்தீர்களா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ஆர்கே, “நான் ஏற்கனவே அவரிடம் கொடுத்துவைத்த ஒரு கோடி ரூபாய் பணம் அவரிடம் இருக்கிறது. அவரிடம் கதை கூறினேன். நடித்தால் ஹீரோவாகத்தான் என அவர் ஒரு மனநிலையில் இருந்தார். அதனால் பேச்சுவார்த்தைகள் இன்னும் இருக்கிறது. அவர் மனம் இறங்கி வந்தால் மீண்டும் அவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும். நிச்சயமாக அவரை அழைப்பேன். அட்வான்ஸ் கொடுத்து வைத்திருக்கிறேன். பயன்படுத்திக்கொள்வேன்” என பதிலளித்தார். 

“அழகர் மலை” திரைப்படத்தை தொடர்ந்து ஆர்கே, “அவன் இவன்”, “ஜில்லா”, “பாயும் புலி” போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

  • actor rk said that he gave one crore advance to vadivelu வடிவேலுகிட்ட கோடி ரூபாய் கொடுத்தேன், ஆனால் அவரு? ஓபனாக போட்டுடைத்த பிரபல நடிகர்…
  • Continue Reading

    Read Entire Article