வனிதா விஜயகுமார் படத்தில் இருந்து எனது பாடலை நீக்க வேண்டும்- வழக்கு தொடுத்த இசைஞானி?

1 day ago 4
ARTICLE AD BOX

ரவுண்டு கட்டும் இளையராஜா!

சமீப காலமாக தனது அனுமதி இன்றி தனது பாடல்களை திரைப்படங்களில் பயன்படுத்தினால் இளையராஜாவிடமிருந்து வழக்கு பாய்ந்துவிடுகிறது. சமீபத்தில் அஜித்குமாரின் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்கள் இடம்பெற்றிருந்தன. தன்னுடைய அனுமதி இல்லாமல் அப்பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்ததாக ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடுத்திருந்தார் இளையராஜா. இந்த நிலையில் வனிதா விஜயகுமார் நடித்த திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல் ஒன்று அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தற்போது வழக்கு பாய்ந்துள்ளது.

ilaiyaraaja appeal to court for his song used in vanitha vijayakumar mrs & mr movie

மிஸஸ் அண்டு மிஸ்டர்…

வனிதா விஜயகுமார், ராபர்ட் மாஸ்டர் ஆகியோரின் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “மிஸஸ் அண்டு மிஸ்டர்”. இத்திரைப்படத்தை வனிதா விஜயகுமாரே இயக்கியுள்ளார். இந்த நிலையில் இத்திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்த சிவராத்திரி என்ற பாடல் ஒரு காட்சியில் இடம்பெற்றுள்ளது.

ilaiyaraaja appeal to court for his song used in vanitha vijayakumar mrs & mr movie

அந்த வகையில் தனது அனுமதி இல்லாமல் இப்பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இளையராஜா தரப்பில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பாய்ந்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தில் இருந்து அப்பாடலை நீக்குமாறும் இளையராஜா முறையீடு. சிவராத்திரி என்ற பாடல் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெற்ற பாடலாகும்.

  • ilaiyaraaja appeal to court for his song used in vanitha vijayakumar mrs & mr movie வனிதா விஜயகுமார் படத்தில் இருந்து எனது பாடலை நீக்க வேண்டும்- வழக்கு தொடுத்த இசைஞானி?
  • Continue Reading

    Read Entire Article