வயசு மட்டும் இடிக்குது… விக்ரமின் மருமகளாகிறார் அந்த நடிகை.?!!

3 weeks ago 27
ARTICLE AD BOX

நடிகர் விக்ரம் கடின உழைப்புக்கு பெயர் போனவர். பல ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வந்த விக்ரம், தனக்கான வாய்ப்பை தேடி அலைந்தார். சேது படத்திற்கு முன்னால் அவர் நடித்த படம் எதுவும் ஓடவில்லை.

சினிமாவில் இருந்து ஓரங்கட்டப்பட்டாலும், திறமையால் மீண்டு எழுந்தார். சினிமாவில் எந்த சர்சையிலும் சிக்காத விக்ரமுக்கோ இப்போது புதிய தலைவலி ஆரம்பித்துள்ளது.

அவரின் மகனும், நடிகருமான துருவ் விக்ரம், தற்போது தான் சினிமாவில் நுழைந்து ஓரளவுக்கு முன்னணி நடிகராக முயன்று வருகிறார். ஆனால் அதற்குள் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இதையும் படியுங்க: கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?

இவர் தற்போது மாரி செல்வராஜ் இயக்கும் பைசன் படத்தில் கபடி வீரராக நடித்து வருகிறார். இந்த படத்தில் நாயகியாக நடிக்கும் அனுபமா பரமேஸ்வரனுடன் துருவுக்கு காதல் தீ பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

படப்பிடிப்பு தளத்தை தவிர அடிக்கடி இருவரும் ஊர் சுற்றி வருவதாகவும், டேட்டிங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மலையாள நடிகையான அனுபமா, கொடி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அவருக்கு பெரிய வாய்ப்பு அமையாவிட்டாலும், டிராகன் படம் மூலம் அங்கீகாரம் கிடைத்திருந்தது.

Dhruv and Anupama in Releationship

தற்போது துருவ் மற்றும் அனுபமாக லிப் லாக் அடிக்கும் புகைப்படம் இணையத்தில் உலா வருகிறது. இருப்பினும் விக்ரம் மகன் அந்த மாதிரி பையன் கிடையாது, சும்மா படத்துக்காக எடுக்கப்பட்ட சீனாக கூட இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

அதே சமயம், இந்த காதல் உண்மையாக இருந்தால், விக்ரம் ஒரு நடிகையை மருமகளாக ஏற்றுக் கொள்ள தயங்க மாட்டார் என்றும், இருந்தாலும் துருவ் விக்ரமை விட நடிகை 2 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Dhruv Vikram Love Success actress is becoming Vikram's daughter-in-law வயசு மட்டும் இடிக்குது… விக்ரமின் மருமகளாகிறார் அந்த நடிகை.?!!
  • Continue Reading

    Read Entire Article