ARTICLE AD BOX
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் மாறி வருகிறது. ஒரு நாள் ஏறினால், மறுநாள் இறங்குவது என தங்கம் விலையில் நிலையான போக்கு இல்லாமல் இருக்கிறது. ஆனால், கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
வாரத்தின் தொடக்க நாளான திங்கட்கிழமை ஒரு சவரன் தங்கத்தின் விலை 680 ரூபாய் உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை 160 ரூபாயும், புதன்கிழமை 640 ரூபாயும் உயர்ந்து, ஒரு சவரன் 78,440 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று மேலும் 70 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 78,920 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்நிலையில், இன்று தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 140 ரூபாய் உயர்ந்து 10,005 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,120 ரூபாய் உயர்ந்து 80,040 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கடந்த மூன்று நாட்களில் மட்டும் ஒரு சவரன் தங்கத்தின் விலை 3,080 ரூபாய் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கம் மட்டுமல்ல, வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 2 ரூபாய் உயர்ந்து 138 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2,000 ரூபாய் உயர்ந்து 1,38,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இந்த தொடர் உயர்வு நகை பிரியர்களையும், முதலீட்டாளர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
