ARTICLE AD BOX
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற உள்ள ஆடி திருவாதிரை விழாவில் வரும் 27-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார். இதனை முன்னிட்டு பாஜக சார்பில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம், கருப்பு முருகானந்தம், முன்னாள் மாவட்ட தலைவர் அய்யப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் வரவேற்புரை நிகழ்த்திய அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் பரமேஸ்வரி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை வருங்கால ‘துணை முதலமைச்சரே’ என குறிப்பிட்டு பேசினார்.
உடனடியாக பதட்டம் அடைந்த நயினார் நாகேந்திரன் அப்படியெல்லாம் சொல்லக்கூடாது என மாவட்ட தலைவர் பரமேஸ்வரிக்கு அறிவுறுத்தினார்.

அதிமுக பாஜக கூட்டணி அமைந்தது முதலே, ஆட்சியில் பங்கு – கூட்டணி ஆட்சி எனும் சர்ச்சை தொடர்ந்து வரும் நிலையில் பாஜகவினர் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை, துணை முதலமைச்சர் என குறிப்பிட்டு அழைத்தது மேலும் சர்ச்சையை தொடரச் செய்யும் வகையில் உள்ளது.
